17 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான கால்பந்துப்போட்டி இந்தியாவில் நடத்தப்படும் – மோடி அறவிப்பு.
பிரதமர் நரேந்திர மோடி ‘மன் கி பாத்’ என்ற பெயரில் கடந்த ஆண்டு அக்டோபர் 3–ஆம் தேதியன்று வானொலியின் மூலம் நாட்டு மக்களுடன் முதன்முறையாக உரையாடினார். தொடர்ந்து ஒவ்வொரு மாதத்தின் இறுதி ஞாயிற்றுக்கிழமைகளில் வானொலி உரையாற்றி வருகிறார்.
இன்று காலை 11 மணியளவில் பிரதமரின் 18-வது ‘மன் கி பாத்’ நிகழ்ச்சி ஒலிபரப்பானது.
இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், விளையாட்டு துறையில் இந்திய இளைஞர்கள் புரட்சியை ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார். இதில் ஒருகட்டமாக, அடுத்த (2017) ஆண்டு 17 வயதுக்குட்பட்டவர்களுக்கான உலகக் கோப்பை கால்பந்து போட்டி இந்தியாவில் நடத்தப்படும் எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
-ரயன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.