Loading...
You are here:  Home  >  Community News  >  Current Article

Indian Air Force plane missing with 29 members

By   /  July 22, 2016  /  Comments Off on Indian Air Force plane missing with 29 members

    Print       Email

iaf-an-32-file_650x400_61469174587இந்திய விமானப்படை விமானம் மாயம்: சென்னையில் இருந்து 200 கடல் மைல் தொலைவில் தேடும் பணி தீவிரம்

சென்னையில் இருந்து அந்தமான் நோக்கி இன்று 29 பேருடன் புறப்பட்டுச் சென்ற இந்திய விமானப்படைக்கு சொந்தமான ‘AN-32’ ரக விமானம் மாயமானது. அந்தமான் – நிக்கோபர் தீவுகளின் தலைநகரான போர்ட் பிளேர் நோக்கி சென்ற இந்த விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் தரைக்கட்டுப் பாட்டு அறையுடனான தொடர்பை இழந்ததால், வங்காள விரிகுடா கடலில் விழுந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.

InCorpTaxAct
Suvidha

இதையடுத்து விமானப்படையின் 5 விமானங்கள் மற்றும் கடலோர காவல்படையின் 4 கப்பல்கள் மூலம் விமானத்தை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. விமானத்தின் கருப்பு பெட்டியில் இருந்து சிக்னல் வருகிறதா என்பதை கண்டறிய, நீர்மூழ்கி கப்பலும் தேடும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து 200 கடல் மைல் தொலைவில் தேடும் பணி நடைபெறுகிறது.

மாயமான இந்த விமானம் ரஷியா தயாரிப்பாகும். இது விமானப்படையில் மிகவும் நம்பகமான இயந்திரங்களை கொண்ட விமானமாக கருதப்படுகிறது. சிறிய விமான தளங்களில்கூட தரையிறங்கும் மற்றும் புறப்படும் திறன் கொண்டது. இந்திய விமானப்படையில் ஏ.என். 32 ரகத்தை சேர்ந்த சுமார் 100 விமானங்கள் பயன்பாட்டில் உள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த விமானம் குறித்து பாதுகாப்புத்துறை வல்லுநர் சுந்தர் தனியார் செய்தி சேனலுக்கு பேட்டி அளிக்கையில், மாயமானதாக கூறப்படும் ஏ.என்-32 ரக விமானம் பழமையானது என்றாலும் தொழில்நுட்பம் நிறைந்தவை. தாம்பரம் விமானப்படை தளத்தில் விமானங்கள் எந்தஒரு குறையும் இல்லாமல் பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. கோளாறு பற்றி எதுவும் நினைக்க வேண்டிய தேவையில்லை. இயற்கை சூழ்நிலைகள் எதுவும் காரணமாக இருக்கலாம். விமானம் மாயமானதற்கு தொழில் நுட்பம் காரணமாக இருக்கும் என்பது என்னுடைய கருத்து.

இந்த விமானம் மிகவும் நேர்த்தியானது, விபத்துகள் நேர்ந்தது கிடையாது. இவ்விவகாரத்தில் போக, போகதான் என்ன நடந்தது என்பது தெரியவரும். கடலில் தேடுவது என்பது சிரமமானது தான். எல்லா விமானங்களை போன்றும் அதிநவீன சாதனமும் இந்த விமானத்திலும் உள்ளது. கடலில் விழுந்து இருந்தால் கருப்பு பெட்டியின் மூலம் கண்டுபிடிக்கப்படும்,” என்று கூறியுள்ளார்.

இதற்கிடையே 23 ஆயிரம் அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்தபோது தரைக்கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மோசமான வானிலை காரணமாக விமானம் திசைமாறிச் சென்று விபத்தில் சிக்கியிருக்கலாம் என்று தெரிகிறது.

-அமுதவன்

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →