Loading...
You are here:  Home  >  Amazing Science  >  Current Article

Indian firm claims world’s first ‘Zika’ vaccine

By   /  February 3, 2016  /  Comments Off on Indian firm claims world’s first ‘Zika’ vaccine

    Print       Email

ehl-mosquitoஉலகை அச்சுறுத்தும் ஸிகா காய்ச்சலுக்கு மருந்து கண்டுபிடித்தது இந்திய நிறுவனம்.

ஐதராபாத்தைச் சேர்ந்த மருத்துவக் கழகமான பாரத் பயோ டெக் ZIKA கொசுவின் மூலமாகப் பரவும் வைரஸ்களைத் தடுக்க மருந்து கண்டுபிடித்திருப்பதாக அறிவித்திருக்கிறது. இந்த நோய் இதுவரை வந்த பெரும்பாலான நோய்களை விடவும் ஆபத்தானதாக உலகை அச்சுறுத்தி வந்தது. இந்த கொசுக்கடியால் கர்ப்பிணிகள் பாதிக்கப்படும்பொழுது அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளை இந்த நோய் கடுமையாகப் பாதிக்கும் என்று கூறப்பட்டது. அந்தக் குழந்தை பலவித குறைபாடுகளுடன் பிறக்கும் என்றும் குறிப்பாக குழந்தையின் தலை மிகவும் சிறியதாக இத்தனூண்டாக இருக்கும் என்றும் கூறப்பட்டது.

InCorpTaxAct
Suvidha

இந்த நோய்க்கு இன்னமும் தடுப்பூசியோ அல்லது மருந்தோ கண்டுபிடிக்கப்படவில்லை என்ற விஷயம்தான் இந்த நோய்மீது மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தி இருந்தது. இப்போது பாரத் பயோ டெக்கின் அறிவிப்பு மிகுந்த ஆறுதலைத் தருமென்று எதிர்பார்க்கபடுகிறது.

இதன் தலைவரான கிருஷ்ணா எல்லா இதுபற்றிக் கூறும்பொழுது “ஒரு வருடத்திற்கு முன்னாலேயே இது பற்றிய ஆராய்ச்சிகளைத் துவங்கிவிட்டோம். மருந்தையும் கண்டுபிடித்துவிட்டோம். சோதனை முயற்சிகளுக்குத்தான் இவ்வளவு நாட்கள் எடுத்துக்கொண்டன.

மிருகங்களின் மீது பரிசோதித்துப் பார்த்தபோது நல்ல முடிவுகள் கிடைத்திருக்கின்றன. வெற்றியடைந்திருக்கிறோம் என்றே சொல்ல வேண்டும். மனிதர்கள் மீது பரிசோதித்துப் பார்ப்பதற்காக உலக மருத்துவக் கழகத்தின் முன் வைத்திருக்கிறோம். விரைவிலேயே நல்ல தகவல்கள் வரும் என்று எதிர்பார்க்கலாம்” என்று நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.

-அமுதவன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →