Loading...
You are here:  Home  >  Deccan Abroad  >  Current Article

Indian Hockey Captain refuse rape charge

By   /  February 4, 2016  /  Comments Off on Indian Hockey Captain refuse rape charge

    Print       Email

இந்திய ஹாக்கி அணியின் கேப்டன் சர்தார்சிங் மீது இங்கிலாந்து பெண் கற்பழிப்புப் புகார். சிங் மறுப்பு.!48392191

இந்திய ஹாக்கி அணியின் கேப்டனாக இருப்பவர் சர்தார் சிங். இவர் மீது இங்கிலாந்து ஜூனியர் ஹாக்கி அணியில் விளையாடிய இந்திய வம்சாவளி வீராங்கனையான 21 வயது ஆஷ்பால் போகல் பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள கூம்கூலன் போலீஸ்

InCorpTaxAct
Suvidha

நிலையத்தில் பரபரப்பான புகார் ஒன்றை அளித்திருக்கிறார்.

“2012 ம் ஆண்டு லண்டனில் நடந்த ஒலிம்பிக் போட்டியின்போது இந்திய அணியின் கேப்டனை முதன்முதலாக நேரில் சந்தித்தேன்.

அதுமுதல் இருவரும் நெருங்கிப் பழக ஆரம்பித்தோம். பல இடங்களுக்கு இருவரும் ஒன்றாக சுற்றித் திரிந்தோம். காலப்போக்கில் எங்களுக்கு உடல் ரீதியாகவும் தொடர்பு ஏற்பட்டது. எங்களுக்குள் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. என்னுடன் அவர் சேர்ந்து வாழ்ந்ததால் கடந்த ஆண்டு நான் கர்ப்பமானேன். இந்த சந்தோஷமான விஷயத்தை அவரிடம் சொன்னபோது ‘உடனடியாக கர்ப்பத்தைக் கலைத்துவிடு. இல்லையெனில் உன்னிடம் உள்ள தொடர்பை துண்டித்துக் கொள்வேன்’ என்று கூறினார். அவரது வற்புறுத்தலின் பேரில் கர்ப்பத்தைக் கலைத்தேன். அதன்பிறகு என்னை விட்டு அவர் விலக ஆரம்பித்தார். திருமணம் செய்ய மறுத்து வருகிறார். திருமணத்துக்கு வற்புறுத்தியபோது உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் என்னை துன்புறுத்தினார். தற்போது என்னுடன் பேசக்கூட மறுத்துவருகிறார். இந்த அநீதிக்கு நியாயம் கிடைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்” இவ்வாறு அந்தப் புகாரில் கூறப்பட்டுள்ளது.

இது குறித்து சர்தார்சிங் கூறும்போது “அந்தப் பெண்ணை எனக்குத் தெரியும். ஆனால் நான் அவரை அடித்துத் துன்புறுத்தியதாகக் கூறுவது தவறானதாகும். தற்போது எனது முழு கவனமும் ஹாக்கி இந்தியா லீக் போட்டி மீதுதான் உள்ளது. அவரது குற்றச்சாட்டு குறித்து எனக்கு இப்போதுதான் தெரியவந்துள்ளது. இது மிகவும் தீவிரமான குற்றச்சாட்டாகும். எனது வக்கீலுடன் ஆலோசனை செய்து நான் பதிலளிப்பேன். அதற்கு சற்று காலதாமதம் ஆகும். அவருடன் எனக்கு நிச்சயதார்த்தம் எதுவும் நடக்கவில்லை” என்றார்.

சர்தார் சிங்கின் தந்தை குர்நாம் சிங் இதுகுறித்துக் கூறியபோது “சர்தார் சிங்கின் ஹாக்கி வாழ்க்கையைக் கெடுக்க சதி செய்து இதுபோன்ற புகார் கொடுக்கப்பட்டுள்ளது. அந்தப் பெண்ணின் புகார் அடிப்படை ஆதாரமற்றது. அதுபோன்று எதுவும் நடக்கவில்லை” என்று தெரிவித்திருக்கிறார்.

-ரயன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →