Loading...
You are here:  Home  >  Community News  >  Current Article

Indian Olympics Association says Narsingh Yadav can replace Praveen Rana : Green signal by NADA

By   /  July 29, 2016  /  Comments Off on Indian Olympics Association says Narsingh Yadav can replace Praveen Rana : Green signal by NADA

    Print       Email

647_051016083532ஊக்கமருந்து சர்ச்சையில் விடுபட்டால் ஒலிம்பிக்கில் நர்சிங் பங்கேற்கலாம்: இந்திய ஒலிம்பிக் சங்கம் அறிவிப்பு

ரியோ ஒலிம்பிக் போட்டியில் ஆடவர் 74 கிலோ ப்ரீஸ்டைல் மல்யுத்தப் போட்டி யில் பங்கேற்க தகுதி பெற்ற நர்சிங் யாதவ் ஊக்கமருந்து விவகாரத்தில் சிக்கியது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்தது. தேசிய ஊக்க மருந்து தடுப்பு மையம் நடத்திய இரண்டு கட்ட பரிசோதனையிலும் அவர் தடை செய்யப்பட்ட ஊக்க மருந்தை பயன்படுத்தியது உறுதி செய்யப் பட்டததால் இந்திய ஒலிம்பிக் சங்கம் நர்சிங் யாதவை சஸ்பெண்டு செய்து இருந்தது.

InCorpTaxAct
Suvidha

இதனால் ஒலிம்பிக்கில் கலந்து கொள்ள முடியாத நிலை உருவானது. இதற்கிடையே அவருக்குப் பதிலாக ரியோ ஒலிம்பிக் போட்டியில் பங் கேற்க பிரவீன் ராணாவை இந்திய மல் யுத்த சங்கம் தேர்வு செய்து அதற் கான ஒப்புதலை உலக மல்யுத்த சங்கத் திடமும் பெற்றது. இதனால் நர்சிங் யாதவின் ஒலிம்பிக் கனவு தகர்ந்ததாக கருதப்பட்டது.

இந்நிலையில் நர்சிங் யாதவ் விவகாரம் தொடர்பாக தேசிய ஊக்க மருந்து தடுப்பு மையத்தின் ஒழுங்கு நடவடிக்கை குழு நேற்று முன்தினம் விசாரணையை தொடங்கியது. விசாரணைக்கு நேரில் ஆஜரான நர்சிங் யாதவ் சுமார் 3 மணி நேரம் விளக்கம் அளித்தார்.

இந்நிலையில் இந்த விவகாரத்தில் நர்சிங் யாதவுக்கு சாதகமான தீர்ப்பு வழங்கப்பட்டால் அவர் ரியோ ஒலிம்பிக்கில் கலந்து கொள்ள முடியும் என்று இந்திய ஒலிம்பிக் சங்கம் தெரி வித்துள்ளது.

இதுகுறித்து இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் பொதுச் செயலாளர் ராஜீவ் மேத்தா நேற்று கூறும்போது, ‘‘இந்திய ஒலிம்பிக் சங்கம் அஞ்சல் அலுவலகம் மாதிரிதான். நாங்கள் வசதி களை செய்து கொடுப்பவர்கள் மட்டுமே. இந்திய மல்யுத்த சங்கத்தின் விருப்பப் படிதான் பிரவீண் ராணாவை மாற்று வீரராக தேர்வு செய்தோம். இதை உலக மல்யுத்த சங்கமும் ஏற்றுக்கொண்டது.

தேசிய ஊக்க மருந்து தடுப்பு மையத்தின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு நர்சிங் யாதவுக்கு சாதகமான தீர்ப்பு வழங்கி, இந்திய மல்யுத்த சங்கம் நர்சிங்கை ரியோவுக்கு அனுப்ப விரும்பினால், இதற்கு உலக மல்யுத்த சங்கமும் சம்மதம் தெரிவித்தால் நாங்கள் ஏன் எதிர்ப்பு தெரிவிக்கப்போகிறோம்?. நர்சிங் யாதவ் ஒலிம்பிக்கில் கலந்து கொள்வதில் எங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை’’ என்றார்.

-ரயன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →