சைக்கிள் போட்டியில் இந்திய அணிக்குத் தங்கம்.!
12–வது தெற்காசிய விளையாட்டுப் போட்டி கவுகாத்தி மற்றும் ஷில்லாங்கில் நடைபெற்று வருகிறது. இதில், டீம் டைம் டிரையல் என்றழைக்கப்படும் 40 கிலோமீட்டர் தொலைவிலான குழு சைக்கிள் போட்டியில் இந்திய அணி தங்கப்பதக்கம் வென்றுள்ளது.
போட்டிக்கான தூரத்தை இந்திய வீரர்கள் 59 நிமிடம் 23 நொடிகளில் கடந்தனர். அதற்கு அடுத்தபடியாக இலங்கை அணி 1 மணி நேரம் 2 நிமிடம் 7 நொடிகளில் சென்றடைந்தனர். பாகிஸ்தான் அணி வெண்கலப்பதக்கம் வென்றுள்ளது.
வெற்றி பெற்ற இந்திய அணியில் கோவை மாவட்டம் அன்னூரை சேர்ந்த மனீஷா இடம்பெற்றிருந்தார். மேலும், பித்யா லஷ்மி, ருடுஜா, சட்புதி, சாவோபா தேவி உள்ளிட்டோரும் இந்த குழுவில் இருந்தனர்.
தமிழக வீராங்கனை மனீஷா, 12 வயதில் சைக்கிள் பந்தயங்களில் பங்கேற்கத் தொடங்கினார். மாவட்டம், மண்டலம், மாநிலம் மற்றும் தேசிய அளவில் நடைபெற்ற சைக்கிள் போட்டிகளில் பல வெற்றிகளைப் பெற்று பதக்கங்களை குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-ரயன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.