3-வது டெஸ்ட்: அஸ்வின், சாகா அபார ஆட்டத்தால் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 234 ரன்கள் குவிப்பு
இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் செயின்ட் லூசியாவில் உள்ள கிராஸ் தீவின் டேரன் சமி தேசிய மைதானத்தில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஹோல்டர் முதலில் பந்துவீச தீர்மானித்தார்.
இந்த அணியின் தொடக்க வீரர்களாக ராகுலும், தவானும் களம் இறங்கினார்கள். ராகுல் தனது வழக்கமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். தவான் 1 ரன் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். அடுத்த வந்த கேப்டன் விராட் கோலி 3 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். இதனால் இந்தியா 19 ரன்கள் எடுப்பதற்குள் 2 விக்கெட்டுக்களை இழந்தது.
அடுத்து ராகுல் உடன் ரகானே ஜோடி சேர்ந்தார். ராகுல் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார். அத்துடன் 50 ரன்னில் வெளியேறினார். அடுத்து வந்த ரோகித் சர்மாவும் 9 ரன்களில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.
5-வது விக்கெட்டுக்கு ரகானுவுடன் அஸ்வின் ஜோடி சேர்ந்தார். சிறிது நேரம் நிலைத்து நின்று ஆடிய ரகானே 35 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 126 ரன்கள் எடுத்து தடுமாறியது. இதனால் 175 ரன்களை இந்திய அணி கடக்குமா என்றே தோன்றியது.
அப்போது அஸ்வினும், சாகாவும் இணைந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஒன்று, இரண்டு ரன்களாக சேர்த்தனர். 64.3 ஓவர்களில் இந்திய அணி 150 ரன்களை எட்டியது. சிறப்பாக விளையாடி வந்த அஸ்வின் 157 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார்.
83.3 ஓவர்களில் 200 ரன்களை எட்டிய இந்திய அணி ஆட்ட நேர முடிவில் 90 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 234 ரன்கள் எடுத்தது. அஸ்வின் 75 ரன்களுடனும், சாகா 46 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
வெஸ்ட் இஸ்டீஸ் தரப்பில் ஜோசப் மற்றும் சாஸ் இருவரும் தலா இரண்டு விக்கெட்டுக்களை கைப்பற்றினர்.
-ரயன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.