Loading...
You are here:  Home  >  Community News  >  Current Article

Injured Ronaldo walked out : Substitute Eder becomes hero.

By   /  July 11, 2016  /  Comments Off on Injured Ronaldo walked out : Substitute Eder becomes hero.

    Print       Email

20160711001272309087-minihighresஐரோப்பிய கால்பந்தாட்டம் இறுதியில் சுவாரஸ்யம் ; காயத்தால் வெளியேறினார் ரொனால்டோ ;சப்ஸ்டிடியூட்டாக வந்த ஈடர் -ஹீரோ ஆனார்.

15-வது ஐரோப்பிய கோப்பை கால்பந்து தொடர் பிரான்ஸ் நாட்டில் நடந்து வந்தது. இதில் 24 அணிகள் பங்கேற்று விளையாடின.

InCorpTaxAct
Suvidha

இறுதிப் போட்டியில் உலக கால்பந்து தரவரிசையில் 8-வது இடத்தில் உள்ள போர்ச்சுகல் அணியும், 17-வது இடத்தில் உள்ள பிரான்ஸ் அணியும் மோதியது.

மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் போர்ச்சுகல் அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.

இந்தப் போட்டியில், ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களில் போர்ச்சுகல் அணியின் நட்சத்திர வீரர் ரொனால்டோ காயம் காரணமாக வெளியேறினார். இது ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்தது.

70-வது நிமிடத்தில் ஜான்செஸுக்கு பதிலாக மாற்று வீரராக ஈடர் களமிறங்கினார். இறுதிவரை இரு அணிகளும் கோல் அடிக்காத நிலையில், கூடுதலாக அளிக்கப்பட்ட நேரத்தில் ஈடர் கோல் அடித்து அசத்தினார்.

இதனால், காயம் காரணமாக ரொனால்டோ வெளியேறியதால் மாற்று ஆட்டக்காரராக களமிறங்கிய ஈடர் ஹீரோவானார். அவர் அடித்த ஒரு கோல்தான் போர்ச்சுகல் அணிக்கு கோப்பையை வென்று அளித்துள்ளது.

-ரயன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →