Loading...
You are here:  Home  >  Sports  >  Cricket  >  Current Article

IPL cricket : Shifting venue in last minute is difficult – Says Rajiv Shukla.

By   /  April 11, 2016  /  Comments Off on IPL cricket : Shifting venue in last minute is difficult – Says Rajiv Shukla.

    Print       Email

rajivshukla-kRzC--621x414@LiveMintஐ.பி.எல், கடைசி நேரத்தில் போட்டியின் இடத்தை மாற்றுவது கடினம்- ராஜீவ் சுக்லா.

ஐ.பி.எல். 20 ஒவர் கிரிக்கெட் போட்டியில் 18 ஆட்டங்கள் மராட்டிய மாநிலத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. மும்பை, புனே, நாக்பூர் ஆகிய இடங்களில் போட்டி நடக்கிறது. இதில் தொடக்க ஆட்டம் மும்பையில் நடந்து முடிந்துவிட்டது.

InCorpTaxAct
Suvidha

மராட்டிய மாநிலத்தில் கடும் வறட்சி நிலவுகிறது. இதனால் ஐ.பி.எல். போட்டி நடத்தப்படும் போது மைதான பராமரிப்புக்கு அதிக அளவில் தண்ணீர் செலவாகும் என்பதால் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

மராட்டியத்தில் இருந்து வேறு இடத்துக்கு ஐ.பி.எல் போட்டியை மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டது. அதோடு மும்பை ஐகோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டது.

மராட்டிய மாநிலத்தில் இருந்து ஐ.பி.எல். போட்டி மாற்றப்பட்டால் நல்லது என்று மாநில முதல்வர் பட்னாவிஸ் தெரிவித்து இருந்தார். ஐ.பி.எல். போட்டி மாற்றப்பட்டால் மராட்டிய மாநிலத்துக்கு ரூ.100 கோடி இழப்பு ஏற்படும் என்று கிரிக்கெட் வாரியம் பதிலடி கொடுத்தது.

இந்த நிலையில் ஐ.பி.எல். போட்டியை கடைசி நேரத்தில் மாற்றுவது கடினமானது என்று ஐ.பி.எல். தலைவர் ராஜீவ்சுக்லா கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:–

மராட்டிய மாநிலத்தில் ஏற்பட்டுள்ள தண்ணீர் பிரச்சினை விவகாரம் விரைவில் தீர்க்கப்படும் என்று நம்புகிறேன். கடைசி நேரத்தில் போட்டியை இங்கிருந்து மாற்றுவது கடினமானது. இதை நாங்கள் கோர்ட்டில் தெரிவிப்போம். எங்களது கருத்தை நீதிபதி தீவிர கவனத்தில் கொள்வார் என்று நம்புகிறேன். புதிய இடங்களை தேர்வு செய்வது என்பது கடினமே. தினசரி ஐ.பி.எல். ஆட்டம் நடக்கிறது. விவசாயிகளுக்கு எங்களது அனைவரது அனுதாபமும் இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இந்த பிரச்சினை குறித்து புனே அணி கேப்டன் டோனி கூறும்போது, போட்டிகளை மாற்றுவதன் மூலம் பிரச்சினைகள் தீர்ந்துவிடப்போதில்லை என்றார்.

ஆனால் காம்பீர் இதில் மாறுப்பட்டு உள்ளார். அவர் கூறும்போது, நாட்டை விட ஐ.பி.எல். போட்டி பெரிது அல்ல. இதனால் மராட்டியத்தில் இருந்து போட்டியை மாற்றலாம். விவசாயிகளின் உணர்வுகளை மதிக்க வேண்டும். விவசாயிகளுக்கு உதவுவது ஒவ்வொரு தனி நபரின் பொறுப்பாகும் என்றார்.

-அமுதவன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →