ஐபிஎல்- 9 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்தியது பஞ்சாப் அணி.
ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 36-வது லீக் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப், டெல்லி டேர்டெவில்ஸ் அணிகள் இன்று மோதின.
டாஸ்வென்ற டெல்லி அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது. முதலில் களமிறங்கிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் குவித்தது.
பஞ்சாப் அணியில் அதிகபட்சமாக ஸ்டோனிஸ் 52 ரன்களும், சாஹா 52 ரன்களும் எடுத்தனர். கேப்டன் முரளி விஜய் 25 ரன்கள் எடுத்தார். டெல்லி அணியில் மோரிஸ் 2 விக்கெட்டுக்களை சாய்த்தார்.
182 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் பின்னர் டெல்லி அணி விளையாடியது. டி காக்கும், சாம்சனும் சிறப்பான தொடக்கத்தை அளித்தனர். டி காக் 52 ரன்களும், சாம்சன் 49 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இருவரும் முதல் விக்கெட்டுக்கு 70 ரன்கள் சேர்த்தனர். பின் வந்தவர்களில் கே.கே.நாயர் மட்டும் 23 ரன்கள் எடுக்க மற்றவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
இதனால், டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 9 ரன்கள் வித்தியாத்தில் தோல்வியை தழுவியது. கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி தனது 3-வது வெற்றியை பதிவு செய்தது.
-ரயன்
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.