Loading...
You are here:  Home  >  Politics  >  Delhi Politics  >  Current Article

‘Is it wrong to receive money from foreign country?’ SC judges asks Acharya.

By   /  May 5, 2016  /  Comments Off on ‘Is it wrong to receive money from foreign country?’ SC judges asks Acharya.

    Print       Email

FL03COVER_COURT_1426972gவெளிநாட்டிலிருந்து பணம் பெறக்கூடாது என்று ஏதேனும் சட்டம் உள்ளதா? ஆச்சார்யாவிடம் உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வி.

சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனுவின் மீதான விசாரணையில் வெளிநாட்டில் இருந்து ஒருவர் பணம் பெறக்கூடாது என்று சட்டம் ஏதேனும் உள்ளதா? என்று சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் கர்நாடக அரசிடம் கேள்வி எழுப்பினார்கள்.

InCorpTaxAct
Suvidha

சொத்துக்குவிப்பு வழக்கில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேர் விடுதலைக்கு எதிரான மேல்முறையீட்டு மனுக்கள் மீது சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமிதவ ராய் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணை நடந்து வருகிறது.

19-வது நாளான நேற்று கர்நாடக அரசு வக்கீல் பி.வி.ஆச்சார்யா தன்னுடைய 2-வது சுற்று வாதத்தில் கூறியதாவது:-

குற்றம்சாட்டப்பட்டவர்கள் ஆஞ்சநேயா பிரிண்டர்ஸ் நிறுவன கட்டிடம், பங்குகள், எந்திரங்கள் ஆகியவற்றை விலைக்கு வாங்கி கட்டிடத்தை இடித்துவிட்டு பிறகு மீண்டும் புதிதாக கட்டியிருக்கிறார்கள். இதன் மதிப்பு ரூ.2 கோடி. குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பு கர்நாடகா ஐகோர்ட்டில் இந்த கட்டிடத்தின் மதிப்பை ரூ.66 லட்சம் என்றும், சுப்ரீம் கோர்ட்டில் சென்ற வாரம் ரூ.13.10 லட்சம் என்றும் வாதிட்டனர் என்றார்.

அப்போது நீதிபதிகள் குறுக்கிட்டு ஜெயலலிதா தரப்பு வக்கீலிடம் இதுபோன்ற முரண்பட்ட கணக்கு முன்வைக்கப்பட்டதற்கான விளக்கம் என்ன என்று கேட்டனர்.

இதற்கு ஜெயலலிதா தரப்பு வக்கீல் மணிசங்கர், அரசு தரப்பு வக்கீல் சொல்லும் கணக்கு தங்கள் தரப்பில் முன்வைக்கப்பட்டது அல்ல என்றும், அந்த கணக்கு ஊழல் தடுப்பு பிரிவினரால் காண்பிக்கப்பட்டது என்றும் கூறினார்.

ACHARYA_B_V_1__2388528fவக்கீல் ஆச்சார்யா தொடர்ந்து, குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பில் 4 பேரின் வருமானம் ஒன்றிணைந்ததாகும். இதை அவர்கள் தனித்தனியாக காண்பிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. உதாரணத்துக்கு ஜெயலலிதாவின் ஏஜெண்டாக சசிகலா செயல்பட்டு வருகிறார் என்று கூறப்படுகிறது. அவர்கள் தங்களுக்குள் ஒருவருக்கு கடன் என்ற பெயரில் வருமானத்தை பகிர்ந்து வந்திருக்கிறார்கள். தனி நபர்களிடம் இவர்களாக பணத்தை கொடுத்துவைத்து அதனை கடனாக பெற்றதாக கணக்கு காட்டியிருக்கின்றனர்.

உதாரணத்துக்கு 1992-93-ம் ஆண்டில் சசிகலாவுக்கு வெளிநாட்டில் இருந்து ரூ.51 லட்சம் பணம் வந்திருக்கிறது. பின்னர் அவர் ஜெயலலிதாவுக்கு ரூ.1 கோடியை கடனாக தந்திருப்பதாக கணக்கு காட்டியிருக்கிறார் என்று கூறினார்.

இதற்கு நீதிபதிகள், வரதட்சணை வாங்கக்கூடாது என்று சட்டம் உள்ளதுபோல, வெளிநாட்டில் இருந்து பணம் பெறக்கூடாது என்று சட்டம் ஏதேனும் இருக்கிறதா? வெளிநாட்டில் இருந்து வருவாய் வந்தது என்று சொல்வதற்கு ஆதாரம் உள்ளதா? குற்றம்சாட்டப்பட்டவர்கள் பல்வேறு விஷயங்கள் தொடர்பாக தங்கள் தரப்பில் ஆதாரங்களை முன்வைத்திருக்கிறார்கள். உங்கள் தரப்பில் வங்கி கணக்குகளில் அவர்களிடையேயான பணபரிமாற்றம் தொடர்பான ஆவணங்கள் ஏதாவது இருக்கிறதா? என்று கேட்டனர்.

அதற்கு ஆச்சார்யா, வங்கி பணபரிமாற்றம் குறித்த ஒரு பட்டியலை வியாழக்கிழமை (இன்று) தாக்கல் செய்வதாக கூறினார். விசாரணை இன்றும் (வியாழக்கிழமை) தொடரும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

-அமுதவன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →