Loading...
You are here:  Home  >  Daily News  >  Current Article

Isha Yoga has not obtained permission from state Govt for constructions.

By   /  March 1, 2017  /  Comments Off on Isha Yoga has not obtained permission from state Govt for constructions.

    Print       Email

AdiYogiUpdate7-16.docximage04கட்டங்கள் கட்ட ஈஷா யோக மையம் அரசிடம் அனுமதி பெறவில்லை – மாநில அரசு.

 

InCorpTaxAct
Suvidha

 

கோவை வெள்ளியங்கிரி மலைப்பகுதியில் உள்ள ஈஷா யோகா மையத்தில் 112 அடி உயரத்தில் பிரமாண்டமான ஆதியோகி சிவன் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இதனை பிரதமர் நரேந்திர மோடி கடந்த வெள்ளிக்கிழமை திறந்து வைத்தார்.

இந்த நிலையில், ஈஷா யோகா மையம் விதிகளை மீறி கட்டடங்களைக் கட்டி வருகிறது என தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

விதிகளை மீறி ஈஷா யோக மையம் கட்டப்பட்டுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் பழங்குடியினர் சங்க பாதுகாப்புத் தலைவர் வழக்குத் தொடர்ந்தார். இது தொடர்பான விசாரணை இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதற்கு தமிழக அரசு அளித்த பதில் மனுவில் கூறியதாவது:-

மத வழிபாட்டைக் கருத்தில் கொண்டு, 19.45 ஹெக்டேர் விளைநிலத்தை திருத்த 2016 அக்டோபர் 8 மற்றும் 2017 பிப்ரவரி 15 ஆகிய தேதிகளில் கோவை ஆட்சியர் ஈஷா யோகா மையத்துக்கு அனுமதி அளித்தார். ஈஷா யோகா மையம் விதிகளை மீறி கட்டடங்களைக் கட்டி வருகிறது.

109 ஏக்கர் நிலத்தில் அங்கீகாரம் பெறாத கட்டடங்கள் கட்டப்படுகின்றன. அங்கீகாரமற்ற கட்டடத்துக்கு அபராதம் வசூலிக்காததால் அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. சிவன் சிலை அமைப்பு பற்றிய ஆவணத்தை தாக்கல் செய்யுமாறு ஈஷா மையத்திடம் கேட்டுள்ளோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து வழக்கு விசாரணையை வெள்ளிக்கிழமைக்கு (நாளை மறுநாள்) உயர் நீதிமன்றம் ஒத்தி வைத்தது.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →