Loading...
You are here:  Home  >  Community News  >  Current Article

ISRO launches 7th and last Satellite for India’s own GPS.

By   /  April 28, 2016  /  Comments Off on ISRO launches 7th and last Satellite for India’s own GPS.

    Print       Email

591514560-isro_6ஐஆர்என்எஸ்எஸ்  1 ஜி செயற்கைக் கோளுடன் விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி-33 ராக்கெட்.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) செயற்கைகோள்களையும், அவற்றை விண்ணில் ஏவுவதற்கான பி.எஸ்.எல்.வி, ஜி.எஸ்.எல்.வி, ஆகிய இரு வகை ராக்கெட்டுகளையும் தயாரித்து வருகிறது. தெற்கு ஆசியாவில் உள்ள கடல் ஆராய்ச்சிக்காக ரூ.1,420 கோடி மதிப்பில் 7 செயற்கைகோள்களை பி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டிருந்தது. அந்தவகையில் ஏற்கனவே 6 செயற்கைகோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளன.

InCorpTaxAct
Suvidha

அதன் தொடர்ச்சியாக ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1-ஜி என்ற 7-வது செயற்கைகோள் தயாரிக்கப்பட்டு, அது பி.எஸ்.எல்.வி. சி-33 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ்தவான் ஏவுதளத்தில் இருந்து விண்ணில் செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்கான இறுதிக்கட்ட பணிகள் நிறைவடைந்து ராக்கெட்டை ஏவுவதற்கான 51½ மணிநேர ‘கவுண்ட்டவுன்’ கடந்த 26-ந் தேதி காலை 9.20 மணிக்கு தொடங்கியது.

இந்த கவுண்ட்டவுன் முடிவடைந்த நிலையில் இன்று பகல் 12.50 மணிக்கு ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1-ஜி செயற்கைக்கோளை சுமந்துகொண்டு பி.எஸ்.எல்.வி. சி-33 ராக்கெட் விண்ணில் சீறிப்பாய்ந்தது. அதன் பாதையை விஞ்ஞானிகள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.

598 கிலோ எடைகொண்ட இந்த செயற்கைகோள் விண்ணில் நிலைநிறுத்தப்பட்டதும் அதன் செயல்பாடுகள் தொடங்கும் இதன் ஆயுட்காலம் 12 ஆண்டுகள் ஆகும்.

இயற்கை பேரிடர் காலங்களில் கடல் பயணத்திற்கு இந்த செயற்கைகோள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மேலும் 1,500 கிலோமீட்டர் சுற்றளவு பரப்பளவுக்கு கடல் வழிகளையும், கடல் எல்லைகளையும் துல்லியமாக கண்காணிக்க முடியும். மேலும் தரையிலும், வான்வெளியிலும் செல்லும் அனைத்து வாகனங்களையும் கண்காணிக்க முடியும்.

-அமுதவன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →