Loading...
You are here:  Home  >  Defense & Space  >  Current Article

ISRO  launches  sixth  navigation  Satellite  successfully.

By   /  March 10, 2016  /  Comments Off on ISRO  launches  sixth  navigation  Satellite  successfully.

    Print       Email

கடல்சார் ஆராய்ச்சிக்காக பிஎஸ் எல்வி சி- 32 ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது.IRNSS_2769358g

ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1–எப் செயற்கைக்கோளுடன், பி.எஸ்.எல்.வி. சி–32 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டுள்ளது. ஆந்திரமாநிலம் ஸ்ரீ ஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து புதன் கிழமை மாலை 4 மணிக்கு இந்த செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது.

InCorpTaxAct
Suvidha

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) செயற்கைக்கோள்களையும், அவற்றை விண்ணில் ஏவுவதற்கான பி.எஸ்.எல்.வி, ஜி.எஸ்.எல்.வி, ஆகிய இரு வகை ராக்கெட்டுகளையும் தயாரித்து வருகிறது. தெற்கு ஆசியாவின் கடல் ஆராய்ச்சிக்காக ரூ.1,420 கோடி மதிப்பில் 7 செயற்கைக்கோள்களை பி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. அந்தவகையில் ஏற்கனவே 5 செயற்கைகோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளன.

அதன்தொடர்ச்சியாக ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1–எப் என்ற 6–வது செயற்கைகோள் தயாரிக்கப்பட்டு, அதற்கான 54½ மணிநேர ‘கவுண்ட்டவுன்’ கடந்த 8–ந்தேதி காலை 9.30 மணிக்கு தொடங்கியது.

இந்நிலையில், ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1–எப் செயற்கைக்கோள் பி.எஸ்.எல்.வி. சி–32 ராக்கெட் மூலம் புதன் மாலை 4 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து விண்ணில் சீறிப்பாய்ந்தது. அது சரியான பாதையில் சென்றது.

இந்த ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1–எப் செயற்கைக்கோள் கடல்சார் ஆராய்ச்சிக்காக அனுப்பப்படுகிறது. இயற்கை பேரிடர் காலங்களில் கடல் பயணத்திற்கு இந்த செயற்கைகோள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மேலும் 1,500 கிலோமீட்டர் சுற்றளவு பரப்பளவுக்கு கடல் வழிகளையும், கடல் எல்லைகளையும் துல்லியமாக கண்காணிக்க முடியும். மேலும் தரையிலும், வான்வெளியிலும் செல்லும் அனைத்து வாகனங்களையும் கண்காணிக்க முடியும்.

இந்த செயற்கைகோளின் ஆயுட்காலம் 12 ஆண்டுகள். இதேபோல் இன்னும் 2 செயற்கைக்கோள்களை கடல்சார் ஆராய்ச்சிக்காக இஸ்ரோ நிறுவனம் அனுப்ப உள்ளது.

-அமுதவன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →