Loading...
You are here:  Home  >  Community News  >  Current Article

‘It  is  undemocratic , Modi  should  think over  it’ – Karunanidhi  on  Uttarakhand  issue.

By   /  March 28, 2016  /  Comments Off on ‘It  is  undemocratic , Modi  should  think over  it’ – Karunanidhi  on  Uttarakhand  issue.

    Print       Email

உத்தரகாண்ட் மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி ; மோடிக்கு கருணாநிதி கண்டனம்,M-Karunanidhi

தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–

InCorpTaxAct
Suvidha

மத்திய அமைச்சரவையின் பரிந்துரையின் பேரில் உத்தரகாண்ட் மாநிலத்தில் இன்று முதல் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல் செய்யப்பட்டுள்ளது. 2012ஆம் ஆண்டு ஜனவரி 30ஆம் தேதி தான் அந்த மாநிலத்தில் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற்றது.

மொத்தம் உள்ள 70 தொகுதிகளில், 32 தொகுதிகளில் காங்கிரசும், 31 தொகுதிகளில் பா.ஜ.க.வும் வெற்றி பெற்றன. 3 சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள், மற்றும் இதரக் கட்சிகளைச் சேர்ந்த 3 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவோடு காங்கிரஸ் கட்சி அந்த மாநிலத்தில் ஆட்சியை அமைத்தது.

கடந்த 18ஆம் தேதி விஜய் பகுகுணா தலைமையில் 9 எம்.எல்.ஏ.க்கள் அரசுக்கு எதிராகப் போர்க்கொடி உயர்த்தி, நிதி நிலை அறிக்கை மீது வாக்கெடுப்பு நடத்த வேண்டுமென்று சட்டப் பேரவையில் வலியுறுத்தினர். 9 அதிருப்தி எம்.எல்.ஏக்கள் ஆளுநரைச் சந்தித்து, ஹரீஷ் ராவத் ஆட்சியைக் கலைக்கக் கோரி மனு அளித்தனர். ஆளுநர் மார்ச் 28ஆம் தேதியான இன்று சட்டப் பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு அரசிடம் கேட்டுக் கொண்டார்.

இந்த நிலையில் கட்சித் தாவல் தடைச் சட்டத்தின்படி 9 பேரும் நேற்று பிற்பகல் முதல் தகுதி நீக்கம் செய்யப்படுவதாகவும் பேரவைத் தலைவரால் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு நியமன உறுப்பினர் உட்பட காங்கிரசுக்கு 27 எம்.எல்.ஏ.க்கள் உள்ள நிலையில், முற்போக்கு ஜன நாயக முன்னணியைச் சேர்ந்த 6 எம்.எல்.ஏ.க்கள் அரசுக்கு ஆதரவு அளிக்க முன் வந்தனர். இதன் காரணமாக பேரவையில் காங்கிரஸ் எளிதாக பெரும்பான்மை பெற்றுவிடும் என்று கூறப்பட்டது.

இந்த நிலையில் தான் அசாமில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த பிரதமர் நரேந்திர மோடி 26ஆம் தேதி இரவு டெல்லி திரும்பி, அன்றிரவே மத்திய அமைச்சரவை கூடி, 356–வது சட்டப் பிரிவின்கீழ் உத்தரகாண்ட் மாநிலத்தில் அரசைக் கலைக்கப் பரிந்துரை செய்து, அந்தப் பரிந்துரையும் ஏற்கப்பட்டு, குடியரசுத் தலைவர் ஆட்சி பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

உச்ச நீதி மன்றத்தின் அரசியல் சட்ட அமர்வு வழங்கியிருக்கும் தீர்ப்பைப் பற்றிக் கவலைப்படாமல், ஜனநாயக விரோதமான இந்த முடிவை எடுக்க வேண்டியது தேவை தானா? 356வது பிரிவு நீக்கப்பட வேண்டும் என்று தி.மு. கழகம் உள்ளிட்ட அரசியல் கட்சிகளும், சட்ட நிபுணர்களும் நீண்ட காலமாகக் குரல் கொடுத்து வரும் நிலையில், உத்தரகாண்ட் மாநிலத்தைப் பற்றி அவசரமாக மேற் கொள்ளப்பட்டுள்ள முடிவு சரியானது தானா என்பது குறித்து பிரதமர் நரேந்திர மோடி சிந்தித்துப் பார்ப்பார் என்பதற்காகவே தி.மு.கழகத்தின் சார்பில் இந்தக் கருத்தினைத் தெரிவிக்கிறேன்.

இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

-அமுதவன்.

swapna

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →