Loading...
You are here:  Home  >  Featured News  >  Current Article

‘Its  sure  DMK  will  come  to  power ‘-  Stalin  at  a  mammoth  public  meet.

By   /  February 22, 2016  /  Comments Off on ‘Its  sure  DMK  will  come  to  power ‘-  Stalin  at  a  mammoth  public  meet.

    Print       Email

‘திமுகதான் ஆட்சியைப் பிடிக்கும்’ –காஞ்சியில் நடைபெற்ற பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் ஸ்டாலின் பேச்சு.12705740_569878399838701_2374599775768242566_n

சென்ற வருடம் செப்டம்பர் மாதம் 20ம் தேதி தொடங்கிய நமக்கு நாமே பேரணியை சென்ற வாரம் முடித்தார் ஸ்டாலின். இதன் நிறைவு விழாவையொட்டி காஞ்சிபுரத்தில் பிரமாண்டமான பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

InCorpTaxAct
Suvidha

அப்போது ஸ்டாலின் கூறியதாவது,  “இந்தியாவிலேயே தேர்தல் நேரங்களை தவிர மற்ற நேரங்களில் தன் சொந்த மாநில மக்களை சந்திக்காத ஒரு முதல் அமைச்சர் இருக்கிறார் என்று சொன்னால் அது அம்மையார் ஜெயலலிதாதான். தன் தொகுதி மக்கள் பாதிக்கப்பட்டபோதே வேனில் உட்கார்ந்து கொண்டு இரட்டை விரலை காட்டிக்கொண்டு வாக்காள பெருமக்களே என்று சொன்னவர் ஜெயலலிதா. வேற எந்த மாநிலத்திலாவது இப்படி ஒரு கொடுமை நடந்திருக்கா. எந்த நாட்டிலாவது நடந்திருக்கிறதா.

இந்த மேடையில் ஜெயலலிதாவுக்கு எச்சரிக்கையாக ஒன்றை சொல்ல விரும்புகிறேன். அறிந்து அறிந்து நீங்கள் தமிழ் மக்களுக்கு செய்கின்ற பாவத்தை அழுது அழுது தொலைக்க வேண்டிய நிலை உங்களுக்கு நிச்சயம் வந்தே தீரும் என்பதை எச்சரிக்கையாக சொல்ல விரும்புகிறேன். ஏமாற்றிவிட்டோம் என்று ஏளனம் செய்தீர்கள் என்றால் எம்மக்கள் பொங்கி எழுவார்கள். தயாராக இருங்கள். என் தமிழ் மக்கள் என்ன அவ்வளவு இளிச்சவாயர்களா.

86 லட்சம் பேர் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்துக்கொண்டிருக்கிறார்கள். வேளாண் பொறியாளர் முத்துக்குமாரசாமி தற்கொலை செய்துகொண்டார். பெண் போலீஸ் அதிகாரி டி.எஸ்.பி. விஷ்ணுப்ரியா தற்கொலை செய்து கொண்டார். அண்மையில் சென்னையில் ஹரீஸ் என்ற போலீஸ் அதிகாரி தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்த தற்கொலைகளுக்கு காரணம் என்ன. யாரால் மிரட்டப்பட்டார் என்பதெல்லாம் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் வெளிவரப்போகிறது. இதுபோன்ற தற்கொலைகள், படுகொலைகள் நடக்க யார் காரணம். இந்த ஆட்சிதான். இந்த ஆட்சிதான் பதில் சொல்ல வேண்டும்.

ஜெயலலிதா அவர்களே, செம்பரம்பாக்கம் விவகாரத்திற்கும் நீங்கள்தான் பதில் சொல்ல வேண்டும். இந்த 5 வருடமாக நடக்கும் ஊழலுக்கும் நீங்கள் தான் பதில் சொல்ல வேண்டும். மறந்துவிடாதீர்கள். திமுக ஆட்சிக்கு வந்தால் காவல்துறையில் எந்தவித அரசியல் குறுக்கீடும் இருக்காது என்பதை இந்த மேடையில் அழுத்தம் திருத்தமாக தெரிவித்துக்கொள்கிறேன்.

அரசு ஊழியர்கள் போராட்டம், ஆசிரியர்கள் போராட்டம், சத்துணவு ஊழியர்கள் போராட்டம், மாற்றுத்திறனாளிகள் போராட்டம், அத்திக்கடவு – அவினாசி திட்டத்துக்காக உண்ணாவிரதப் போராட்டம் என நடந்து கொண்டிருக்கிறது. எஸ்.வி.எஸ். மருத்துவக் கல்லூரி மாணவிகள் போராட்டம். இந்தப் போராட்டங்கள் எதை காட்டுகிறது. அதிமுக ஆட்சியினுடைய கையாளாகாததனத்தைத்தான்.

இந்த லட்சணத்துல அம்மா கால் சென்டர் என்று அறிவிக்கிறார்கள். அம்மா சேவை மையம். அம்மாவை தொடர்புகொள்ள 1100. ஏற்கனவே 110 விதிகளை பயன்படுத்தி 111 போட்டாங்க. 110க்கு பக்கத்தில் இன்னொரு பூஜ்ஜியத்தை போட்டு 1100 என இப்போது ஒரு சேவை மையம். சாகுற நேரத்தில சங்கரா சங்கரா என்று சொல்லுவார்களே… அதுபோல ஆட்சி போகுற நேரத்திலே அம்மா சேவை மையம்.

திமுக ஆட்சி அமைந்ததும் உறுதியாக சொல்கிறேன், அரசு மக்களை தேடி வரும். அதனால்தான் நமக்கு நாமே பயணத்தின் மூலமாக மக்களை நான் சந்தித்தேன். மக்கள் பிரதிநிதிகள் உங்களை தேடி வந்து உங்களது குறைகளை கேட்பார்கள். சேவை உரிமை சட்டத்தின்கீழ், அதன் சிறப்பு என்னவென்றால் அரசு அலுவலங்களில் நீங்கள் போய் அலையதேவையில்லை. ரேசன் கார்டு கேட்டு விண்ணப்பித்தால் கூட, குறிப்பிட்ட நாளில் அந்த ரேசன் கார்டு உங்கள் கைகளுக்கு வரவேண்டும். அதுபோன்ற ஆட்சியை திமுக தரும்.

அதிமுக ஆட்சியில் செயலிழந்து, சீரழிந்து கிடக்கிற இந்த நிர்வாகத்தை மீட்டெடுக்க வேண்டும். அதிமுக ஆட்சியில் 10 வருடம பின்னோக்கி சென்றுகொண்டிருக்கிறோம். சேவை உரிமை சட்டம் வந்தால்தான் இந்த நாட்டை நாம் காப்பாற்ற முடியும். மக்களை காப்பாற்ற முடியும். அதில் அசைக்க முடியாத நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அந்த சட்டம் கொண்டுவரப்படும்.”.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.

-அமுதவன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →