Loading...
You are here:  Home  >  Politics  >  Delhi Politics  >  Current Article

Jaya  case  in  SC.  Jaya’s  counsel starts argument.

By   /  April 1, 2016  /  Comments Off on Jaya  case  in  SC.  Jaya’s  counsel starts argument.

    Print       Email

உச்சநீதி மன்றத்தில் ஜெயலலிதாவின் சொத்து குவிப்பு வழக்கு. ஜெயா தரப்பு வழக்கறிஞர் வாதிடத் தொடங்கினார்.28TH_JAYA-5P9_2129324f

ஜெயலலிதா தரப்பு வக்கீல் எல்.நாகேஸ்வரராவ் தங்கள் தரப்பு வாதத்தை தொடங்கினார். அவர் தன்னுடைய வாதத்தில் கூறியதாவது:-

InCorpTaxAct
Suvidha

இந்த வழக்கு அப்போதைய ஆட்சியினரால் அரசியல் உள்நோக்கத்துடன் தொடரப்பட்டது. ஜெயலலிதா உள்ளிட்டோரின் வருமானம் அனைத்தும் சட்டத்துக்கு உட்பட்ட வருமானம் ஆகும். இதில் வருவாய்க்கு மீறிய சொத்து என்று ஏதுமில்லை என்று நிரூபிக்க எங்களிடம் அனைத்து ஆதாரங்களும் உள்ளன. சட்டத்தின் அடிப்படையிலும் ஆவணங்களின் வலுவுடனும் நாங்கள் அதனை நிரூபிக்க தயாராக இருக்கிறோம்.

விசாரணை அமைப்பு என்ற முறையில் கர்நாடக அரசு தரப்பு குற்றம் சுமத்தப்பட்டவர்கள் மீதான குற்றச்சாட்டுக்களை நிரூபிக்க தவறிவிட்டது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் என்பதால், குற்றமற்றவர்கள் என்பதை நிரூபிக்க எங்கள் தரப்பில் உரிய ஆவணங்களை கோர்ட்டில் தாக்கல் செய்தோம். ஆனால் எங்கள் ஆவணங்களை பயன்படுத்தி, கீழ்கோர்ட்டில் தொடங்கி தற்போது சுப்ரீம் கோர்ட்டு வரை கர்நாடக அரசு எங்கள் தரப்பு மீது குற்றம் சாட்டி வருகிறது. அடிப்படையில் கர்நாடக அரசு எந்த ஒரு முயற்சியையும் எடுக்கவில்லை.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் என்ற முறையில் எங்கள் தரப்பில் நாங்கள் அனைத்து ஆவணங்களையும் ஒப்படைத்து எங்கள் கடமையை முறையாக நிறைவேற்றினோம். ஆனால் குற்றம் சாட்டும் விசாரணை அமைப்பு என்ற முறையில் கர்நாடக அரசு எதையும் செய்யவில்லை. குற்றச்சாட்டை முன்வைத்ததோடு நிறுத்திக்கொண்டார்கள். குற்றச்சாட்டு தொடர்பான ஆவணம் என்ன? அந்த குற்றச்சாட்டில் எந்த அளவு உண்மைத்தன்மை உள்ளது என்பது போன்ற விஷயங்களை அவர்கள் முன்வைக்கவில்லை. எங்கள் மீதான குற்றச்சாட்டுக்கு எதிராக நாங்கள் முன்வைத்த ஆவணங்களை மட்டுமே எடுத்துக்கொண்டார்களே தவிர அவர்களாக எதையும் செய்யவில்லை. எங்கள் தரப்பை காரணமின்றி அலைய வைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

இவ்வாறு வாதாடிய வக்கீல் நாகேஸ்வரராவ் சாட்சிய சட்டத்தின் அடிப்படையில் ஏற்கனவே வழங்கப்பட்ட தீர்ப்புகளை நீதிமன்றத்துக்கு சுட்டிக்காட்டினார்.

பின்னர் இந்த வழக்கு விசாரணை வருகிற 5-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அன்றும் ஜெயலலிதா தரப்பில் மூத்த வக்கீல் எல்.நாகேஸ்வரராவ் தன் வாதங்களை தொடருவார்.

-அமுதவன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →