ஜெயா அரசாங்கம் செயலற்று தூங்கிக்கொண்டிருக்கும் அரசாங்கம். எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கண்டனம்.
பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதை எதிர்த்து தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டுவருமாறு திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
பாலாற்றில் தடுப்பணை கட்டும் ஆந்திர மாநில அரசையும், அதை தடுக்காமல் தூங்கிக் கொண்டிருக்கும் அதிமுக அரசையும் கண்டித்து வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.
இதற்கு திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தலைமேயற்றார்.
வேலூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை உள்ளிட்ட மூன்று மாவட்டங்கள் சார்பில் விவசாயிகள் மற்றும் திமுக தொண்டர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
அப்போது பேசி ஸ்டாலின் “திமுக ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்கள் நலனில் அக்கறை கொள்ளும். விவசாயிகள் இன்னல்களுக்கு எப்போதுமே குரல் கொடுக்கும் இயக்கம் திமுக.
பாலாறில் புதிய அணை கட்டும் ஆந்திர அரசின் முயற்சியை முந்தைய திமுக ஆட்சியில் கருணாநிதி தடுத்து நிறுத்தினார். இப்போது கட்டப்படும் தடுப்பணையை அதிமுக அரசு தடுக்கத் தவறிவிட்டது.
வேலூர், திருவாரூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் என 4 மாவட்ட விவசாயிகளை பாதிக்கும் இந்த தடுப்பணை விவகாரம் குறித்து முதலமைச்சர் ஜெயலலிதா உடனடியாக முதல்வர் சந்திரபாபு நாயுடுவை உடனடியாக சந்தித்துப் பேச வேண்டும்.
தடுப்பணை கட்டுவதற்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும். விவசாயிகளின் நலனுக்காகவும், வேலூர் உள்ளிட்ட மக்களின் குடிநீர் பிரச்சினைக்காகவும் என்றைக்கும் திராவிட முன்னேற்றக் கழகம் குரல் கொடுக்கும்” என்றார்.
-அமுதவன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.