Loading...
You are here:  Home  >  Featured News  >  Current Article

Jaya, Karunanidhi Nomination Papers Accepted

By   /  April 30, 2016  /  Comments Off on Jaya, Karunanidhi Nomination Papers Accepted

    Print       Email

collage_2834776fசட்டசபைத் தேர்தலில் ஜெயலலிதா கருணாநிதி ஸ்டாலின் உட்பட முக்கியத் தலைவர்களின் மனுக்கள் ஏற்பு.

தமிழக சட்டசபை தேர்தலுக்காக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு ஜெயலலிதா, கருணாநிதி, விஜயகாந்த், அன்புமணி, திருமாவளவன், மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன.

InCorpTaxAct
Suvidha

தமிழக சட்டசபை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 22-ந்தேதி தொடங்கி நேற்று வரை நடந்தது.

234 தொகுதிகளிலும் நேற்று பிற்பகல் 3 மணிக்கு மனு தாக்கல் முடிந்ததும் மொத்த மனுக்களின் எண்ணிக்கை கணக்கிடப்பட்டது.
இதையடுத்து மொத்த வேட்புமனுக்கள் கணக்கிடப்பட்டு நேற்றிரவு இணையத்தளத்தில் தேர்தல் கமிஷன் தகவல்களை வெளியிடப்பட்டது. அதன்படி 234 தொகுதிகளிலும் மொத்தம் 7135 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

5 முனைப்போட்டி காரணமாக தமிழகத்தில் இந்த தடவை தேர்தலில் போட்டியிடுபவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. கடந்த 2011-ம் ஆண்டு தேர்தலின் போது 234 தொகுதிகளிலும் 2748 பேர் போட்டியிட்டனர். இந்த ஆண்டு 6343 ஆண்கள் களத்தில் குதித்துள்ளனர்.

பெண் வேட்பாளர்களின் எண்ணிக்கையும் இதுவரை எந்த தேர்தலிலும் இல்லாத அளவுக்கு அதிகரித்தள்ளது. கடந்த தேர்தலில் 137 பெண் வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இந்த தடவை 789 பெண்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

மூன்று திருநங்கைகளும் தேர்தலில் போட்டியிட மனு செய்துள்ளனர்.

கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலின் மனு, உளுந்தூர்பேட்டையில் விஜயகாந்த் மனு, விருகம்பாக்கத்தில் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் மனு, பென்னாரகத்தில் டாக்டர் அன்புமணி ராமதாசின் மனு, கடலூரில் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் மனுக்களும் ஏற்கப்பட்டன.

-அமுதவன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →