Loading...
You are here:  Home  >  World News  >  Asia News  >  Current Article

Jayalalitha asks who is responsible for ceding Katchatheevu  to Sri Lanka?

By   /  June 21, 2016  /  Comments Off on Jayalalitha asks who is responsible for ceding Katchatheevu  to Sri Lanka?

    Print       Email

கச்சத்தீவை இலங்கைக்குத் தாரை வார்க்க யார் காரணம்? திமுக மீது சட்டசபையில் ஜெயலலிதா கடும் தாக்கு.Jaya_2902623g

 கச்சத்தீவு பிரச்சினையில் கருணாநிதி கூறியதில் எது உண்மை? என்று கேள்வி எழுப்பிய முதல்-அமைச்சர் ஜெயலலிதா, இதுகுறித்து எதிர்க்கட்சி தலைவர் (மு.க.ஸ்டாலின்) விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் கூறினார்.

InCorpTaxAct
Suvidha

தமிழக சட்டசபையில் நேற்று கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடந்தது. இதில், தி.மு.க. உறுப்பினர் க.பொன்முடி பேசினார். அப்போது நடந்த விவாதம் வருமாறு:-

உறுப்பினர் க.பொன்முடி:- கவர்னர் உரையில் விவசாயிகளுக்கு என்று திட்டங்கள் இல்லை?. தேசிய வங்கிகளில் உள்ள விவசாய கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும்.

முதல்-அமைச்சர் ஜெயலலிதா:- தி.மு.க. ஆட்சியில் விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டபோது தேசிய வங்கிக்கடன்களும் தள்ளுபடி செய்யப்பட்டதா?.

உறுப்பினர் க.பொன்முடி:- தி.மு.க. ஆட்சியில் 7 ஆயிரம் கோடி ரூபாய் விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டது.

அமைச்சர் செல்லூர் ராஜூ:- உறுப்பினர் சொல்வது தவறு. தி.மு.க. ஆட்சியில் ரூ.5,393 கோடி விவசாய கடன் தான் தள்ளுபடி செய்யப்பட்டது. அதுவும் சிறு, குறு விவசாயிகள் பெற்ற கடன் பயன் குறைவு தான். பயன்பெற்றது எல்லாம் மிட்டா மிராசுதான்.

(இதற்கு தி.மு.க. உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து கூச்சலிட்டனர்)

முதல்-அமைச்சர் ஜெயலலிதா:- எதிர்க்கட்சித் தலைவராக நான் இந்த அவைக்கு வந்து முன்பு கேட்ட கேள்விக்கு, 2006-ம் ஆண்டு அன்றைய தி.மு.க. நிதியமைச்சர் அன்பழகன் எனக்கு என்ன பதிலளித்தார் தெரியுமா?. இதேபோன்ற கேள்வியை நான் கேட்டேன் விவசாயிகளின் அனைத்துக் கடன்களையும் நீங்கள் தள்ளுபடி செய்வீர்களா என்று. அதற்கு அன்றைய தி.மு.க. நிதியமைச்சர் அன்பழகன் தெரிவித்த பதில் மாமன், மச்சான் வாங்கிய கடன்களை எல்லாம் தள்ளுபடி செய்ய முடியாது என ஏகடியம் பேசினார் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

க.பொன்முடி:- எதிர்கட்சி தலைவராக முதல்-அமைச்சர் இருந்தபோது என்ன கேட்டாரோ அதைத்தான் நானும் கேட்கிறேன். விவசாயிகளும் எதிர்பார்க்கிறார்கள். கரும்புக்கான கொள்முதல் விலை 2 ஆண்டுகளாக விவசாயிகளுக்கு வழங்கப்படவில்லை.

அமைச்சர் பி.தங்கமணி:- உறுப்பினர் கூறுவது தவறான தகவல். 2011-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சியை விட்டு செல்லும்போது, ஒரு கிலோ சர்க்கரை விலை ரூ.40 ஆக இருந்தது. கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.2 ஆயிரம் வழங்கப்பட்டது. ரூ.300 கோடி பாக்கி வைத்துவிட்டு சென்றனர். ஆனால், முதல்-அமைச்சராக ஜெயலலிதா பொறுப்பேற்றவுடன் விவசாயிகளின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு, 3 மாதத்திலேயே அந்தத் தொகை விவசாயிகளுக்கு வாங்கிக் கொடுக்கப்பட்டது. அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.2,500 ஆக தொகை உயர்த்தி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், முதல்-அமைச்சராக ஜெயலலிதா ஆட்சி பொறுப்பேற்ற பிறகு கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.2,850 என உயர்த்தி வழங்கினார். எனவே, விவசாயிகள் பற்றி பேச தகுதியில்லை.

(இதற்கு தி.மு.க. உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்)

க.பொன்முடி:- எதிர்க்கட்சிகளுக்கு பேச தகுதியில்லை என்பதா?.

அமைச்சர் பி.தங்கமணி:- விவசாயிகள் பற்றி பேச தகுதியில்லை என்று தான் சொன்னேன்.

உறுப்பினர் க.பொன்முடி:- வாட் வரி குறைக்கப்பட்டதால் தான் சர்க்கரை விலை குறைந்தது.

அமைச்சர் பி.தங்கமணி:- அது தவறு, ‘பர்ச்சஸ் டேக்ஸ்’-ஐ முதல்-அமைச்சர் ஜெயலலிதா குறைத்ததால் தான் சர்க்கரை விலை குறைந்தது.

முதல்-அமைச்சர் ஜெயலலிதா:- உறுப்பினர் எல்லா குற்றச்சாட்டுகளையும் ஆதாரம் இல்லாமல்தான் கூறிக்கொண்டிருக்கின்றார். ஏற்கனவே முண்டியம்பாக்கம் சர்க்கரை ஆலையைப் பற்றி பேசினார். அங்கே இப்படி சொன்னார்கள், அப்படி சொன்னார்கள் என்று பல குற்றச்சாட்டுகளைச் சொன்னார். வாய்வழியாக சொன்னதாகத்தான் சொல்லுகிறாரே தவிர அவர்கள் அப்படியெல்லாம் சொன்னார்கள் என்பதற்கு என்ன ஆதாரம்?. எழுத்தில் கொடுத்தார்களா? அதைப்போலவே இப்பொழுது ஒரு அதிகாரி சில தகவல்களைத் தெரிவித்தார் என்று சொல்லுகிறார். அதுவும் வாய்வழியாகத் தெரிவித்தார் என்கிறார். இதற்கெல்லாம் என்ன ஆதாரம்?. இப்படி ஆதாரம் இல்லாமல் பேசுவதென்றால் பேசிக்கொண்டே இருக்கலாம். ஆகவே ஆதாரம் இல்லாமல் சொன்ன குற்றச்சாட்டுகள் அனைத்தையும் அவைக் குறிப்பிலிருந்து தாங்கள் நீக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

சபாநாயகர் ப.தனபால்:- ஆதாரம் இல்லாமல் பேசியது அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்படுகிறது.

(இந்த நேரத்தில் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் எழுந்து பேச முயற்சி செய்தார்)

சபாநாயகர் ப.தனபால்:- ஆதாரத்தை என்னிடம் காட்டிவிட்டு பேச வேண்டும்.

முதல்-அமைச்சர் ஜெயலலிதா:- 2006-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை தி.மு.க. ஆட்சியில் இருந்தது. அவர்கள் ஆட்சியை விட்டு சென்றபோது பாக்கி வைத்துவிட்டு சென்றனர். கரும்பு விவசாயிகளுக்கு, பொதுப்பணித்துறை டெண்டருக்கு, போக்குவரத்து துறை டீசல் பில்லுக்கு என எல்லாவற்றையும் திவாலாக்கிவிட்டு சென்றனர். எதிர்க்கட்சி தலைவர் தேர்தல் பிரசாரத்தின்போது, செய்த தவறுக்கு பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.

அடுத்து உறுப்பினர் பொன்முடி என்ன பேசலாம் என்று யோசிக்கும் முன், மேலும் சில தகவல்களை தெரிவிக்க விரும்புகிறேன். எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் பேசும்போது தமிழக அரசை மத்திய அரசு கலந்தாலோசிக்கவில்லை எனத் தெரிவித்தார். கச்சத்தீவு காவு கொடுக்கப்பட்டதை தடுக்க எதையுமே செய்யாமல் மவுனம் சாதித்துவிட்டு, கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்ட பிறகு, பெயரளவிலே தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி கச்சத்தீவு பிரச்சினைக்கு மூடு விழா நடத்தினார் கருணாநிதி.

அந்தத் தீர்மானத்தின் மீது பேசிய கருணாநிதி, “ஜூன் மாதம் 27-ந்தேதி திடீரென்று அறிவிப்பு வந்தது. இப்போதும் சொல்கிறேன். இதுபற்றி எந்த விதமான சூசகமான தகவலையும் இந்த அரசுக்கு அறிவிக்கவில்லை. 27-ந்தேதி பத்திரிகையில் பார்த்தவுடன் பதறிப்போய் எல்லாக் கட்சித்தலைவர்களுக்கும் தந்தி கொடுத்தேன்” என்று கூறியிருக்கிறார்.

ஆனால், கருணாநிதியின் தலைமையில் “டெசோ” அமைப்பின் சார்பில் 15-4-2013 அன்று நடைபெற்ற கலந்துரையாடல் கூட்டத்தில் கச்சத்தீவு குறித்த தீர்மானத்தில், “1974-ம் ஆண்டு ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டபோது, தி.மு.க. அரசு முதல் நிலையிலேயே அதனைக் கடுமையாக எதிர்த்தது. அதையும் மீறி ஒப்பந்தம் கையெழுத்தானபோது, குறைந்த பட்சம் தமிழக மீனவர்களுக்கு கச்சத்தீவு பகுதியில் மீன்பிடிக்கும் உரிமையும், மீனவர்களின் வலைகளை அங்கே உலர்த்திக் கொள்வதற்கான உரிமையும் அந்த ஒப்பந்தத்தின் பிரிவுகளில் சேர்க்கப்பட வேண்டும் என்று தி.மு.க. அரசு வலியுறுத்தி அந்த ஷரத்துகள் சேர்க்கப்பட்டன” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் எது உண்மை என்பதை எதிர்க்கட்சித் தலைவர் தான் நாட்டு மக்களுக்கு விளக்க வேண்டும்.

1974-ல் தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில், பேசிய கருணாநிதி, “கச்சத்தீவு இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்ட செய்தியை, பத்திரிகைகளில் பார்த்துத்தான் தெரிந்து கொண்டேன்; பதறிப் போனேன்” என்கிறார். ஆனால் 2013-ல், நடைபெற்ற டெசோ கூட்டத்தில், ஒப்பந்தம் நிறைவேற்றப்படுவதற்கு முன்பே, இவர் சொல்லித் தான் சில ஷரத்துகள் சேர்க்கப்பட்டன என்கிறார். இவற்றில் எது உண்மை என்பதை எதிர்க்கட்சித் தலைவர் தான் விளக்கவேண்டும்.

இவ்வாறு விவாதம் நடந்தது.

-அமுதவன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →