Loading...
You are here:  Home  >  Featured News  >  Current Article

Jayalalitha In Talks With Alliance Parties

By   /  March 13, 2016  /  Comments Off on Jayalalitha In Talks With Alliance Parties

    Print       Email

CM020கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை தொடங்கினார் ஜெயலலிதா.

சட்டமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா பேச்சுவார்த்தை நடத்தினார்.

InCorpTaxAct
Suvidha

இந்திய குடியரசு கட்சியின் செ.கு.தமிழரசன், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வேல்முருகன், இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் பாக்கர், கொங்கு இளைஞர் பேரவையின் தனியரசு, அகில இந்திய பார்வார்டு பிளாக் மாநில பொதுச்செயலாளர் கதிரவன், தமிழ் மாநில முஸ்லிம் லீக்கின் ஷேக் தாவூத், சமத்துவ மக்கள் கழகத் தலைவர் எர்ணாவூர் நாராயணன் ஆகியோருடன் போயஸ் கார்டனில் உள்ள தனது இல்லத்தில் ஜெயலலிதா பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்த சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் பாக்கர், இந்திய தவ்ஹீத் ஜமாத் செயற்குழுவில் பேசி முடிவு எடுத்தப் பின்னர் ஆதரவு குறித்து அறிவிக்கப்படும். சமுதாய ரீதியான கோரிக்கைகளை முன்வைத்துள்ளோம் என்றார்.

இந்திய குடியரசு கட்சியின் செ.கு.தமிழரசன், அதிமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக உறுதி செய்திருக்கிறோம் என்றார்.

-அமுதவன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →