கவர்னரைச் சந்தித்தார் ஜெயலலிதா. மந்திரிசபைப் பட்டியலை வழங்கினார்.
தமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. 134 இடங்களில் அமோக வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது. அ.தி.மு.க. தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா 4-வது முறையாக முதல்-அமைச்சராகிறார். (இடையில் கோர்ட் தீர்ப்புக்களால் பதவி இழந்த அவர் மீண்டும் கோர்ட் உதவியோடு இருமுறை பதவி ஏற்றதையும் சேர்த்துப் பார்த்தால் இது 6வது பதவி ஏற்பு விழா.) பதவி ஏற்பு விழா வருகிற 23-ந்தேதி (திங்கட்கிழமை) சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் நடைபெறுகிறது.
இதற்கான ஏற்பாடுகள் தயாராகி வரும் நிலையில், முதலமைச்சர் ஜெயலலிதா இன்று கவர்னர் ரோசய்யாவை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார். அப்போது எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதம் மற்றும் அமைச்சர்கள் பட்டியலை வழங்கினார்.
இந்நிலையில், ஜெயலலிதா தலைமையிலான தமிழக அமைச்சரவையில் இடம்பெற உள்ள அமைச்சர்கள் பட்டியல் வெளியாகி உள்ளது. அது வருமாறு:-
முதலமைச்சர் ஜெயலலிதா – உள்துறை, பொது ஆட்சிப்பணி, காவல்
ஓ.பன்னீர்செல்வம் – நிதி
எடப்பாடி பழனிச்சாமி- பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலை
திண்டுக்கல் சீனிவாசன் – வனத்துறை
பி.தங்கமணி – மின்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை
செல்லூர் ராஜூ – கூட்டுறவு, தொழிலாளர் நலன்
எஸ்.பி. வேலுமணி – உள்ளாட்சி மற்றும் சிறப்பு திட்ட அமலாக்கம்.
டி.ஜெயக்குமார் – மீன்வளம்
சரோஜா – சத்துணவு மற்றும் சமுகநலம்
சி.வி.சண்முகம் – சட்டம், நீதிமன்றம், சிறைத்துறை
ஆர்.காமராஜ் – உணவு மற்றும் இந்து சமய அறநிலையத்துறை
ஆர்.பி.உதயகுமார் – வருவாய்
உடுமலை ராதாகிருஷ்ணன் – வீட்டு வசதி
கடம்பூர் ராஜு- தகவல் மற்றும் விளம்பரம்
ஓ.எஸ்.மணியன் – கைத்தறி, நெசவு.
கே.வி.கருப்பண்ணன் – சுற்றுச்சூழல்
கே.பி.அன்பழகன் – உயர்கல்வி
ஓ.எஸ்.மணியன் – ஜவுளி மறறும் கைத்தறி
விஜயபாஸ்கர் – சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை
எஸ்.பி.சண்முகநாதன் – பால்வளம்
எம்.சி. சம்பத் – தொழில்துறை
ராஜேந்திர பாலாஜி – ஊரகத் தொழில்துறை
பென்ஜமின் – கல்வி மற்றும் விளையாட்டுத் துறை
வளர்மதி (ஸ்ரீரங்கம்) – பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறை
துரைக்கண்ணு – விவசாயம், கால்நடை
மணிகண்டன் – தகவல் தொழில்நுட்பம்
ராஜலட்சுமி – ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை,
எம்.ஆர். விஜயபாஸ்கர் – போக்குவரத்து.
வெல்லமண்டி நடராஜன் – சுற்றுலாத்துறை.
-அமுதவன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.