Loading...
You are here:  Home  >  Community News  >  Current Article

Jaya’s assets case in SC:  Final argument today

By   /  June 1, 2016  /  Comments Off on Jaya’s assets case in SC:  Final argument today

    Print       Email

hqdefaultசொத்துக்குவிப்பு வழக்கு; சுப்ரீம் கோர்ட்டில் இன்று இறுதி வாதம்

சொத்துக்குவிப்பு வழக்கில் இறுதி வாதம் இன்று (புதன்கிழமை) சுப்ரீம் கோர்ட்டில் நடக்கிறது.

InCorpTaxAct
Suvidha

சொத்துக்குவிப்பு வழக்கில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேர் விடுதலைக்கு எதிரான மேல்முறையீட்டு மனுக்கள் மீது சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமிதவராய் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணை நடந்து வருகிறது.

ஏற்கனவே கடந்த மாதம் 12-ந்தேதியன்று நடந்த விசாரணையின்போது ஜூன் 1-ந் தேதிக்கு விசாரணையை ஒத்தி வைப்பதாகவும் அனைத்து தரப்பினரும் அன்றே தங்கள் வாதங்களை முடித்துக் கொள்ளவேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

இதுவரை மொத்தம் 23 நாட்கள் இந்த விசாரணை நடந்து உள்ளது. கர்நாடக அரசு தரப்பில் மூத்த வக்கீல் துஷ்யந்த் தவே, கர்நாடக அரசு வக்கீல் பி.பி.ஆச்சார்யா, பேராசிரியர் க.அன்பழகன் தரப்பில் மூத்த வக்கீல் அந்தியார்ஜூனா, ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் தரப்பில் மூத்த வக்கீல் எல்.நாகேஸ்வரராவ் (தற்போது சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்), மூத்த வக்கீல் சேகர் நாப்டே ஆகியோர் தங்கள் தரப்பு வாதங்களை ஏற்கனவே நிறைவு செய்து உள்ளனர்.

ஜெயலலிதா தரப்பு வாதங்கள் மீதான எதிர்வாதத்தை மீண்டும் கர்நாடக அரசு வக்கீல் பி.வி.ஆச்சார்யா முன்வைத்து வந்தார். கடந்த மாதம் 12-ந்தேதியன்று சுப்ரீம் கோர்ட்டுக்கு கோடை விடுமுறையை தொடர்ந்து நீதிபதிகள் விசாரணையை ஜூன் 1-ந்தேதியன்று ஒத்திவைத்தனர்.

அப்போது, விசாரணையை அன்று (ஜூன் 1-ந்தேதி) நாள் முழுவதும் வைத்துக் கொள்ளலாம். ஆச்சார்யாவுக்கு 2 மணி நேரம் ஒதுக்கப்படும். மீதி நேரத்தில் மற்றவர்கள் தங்கள் வாதங்கள் முன்வைக்கலாம் என்று நீதிபதிகள் கூறினர்.

மனுதாரர்களில் ஒருவரான சுப்பிரமணியசாமி, தான் சட்டத்தின் அடிப்படையில் சில வாதங்களை முன்வைக்க வேண்டி இருப்பதாக தெரிவித்தார். அவருடைய வாதங்களை எழுத்து வடிவில் தாக்கல் செய்யுமாறும் அவருக்கும் ஜூன் 1-ந்தேதியன்று சிறிது நேரம் ஒதுக்கப்படும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தது இருந்தது, குறிப்பிடத்தக்கது.

அதன்படி சொத்துக்குவிப்பு வழக்கில் மேல்முறையீட்டு மனு மீதான இறுதி வாதங்கள் இன்று(புதன்கிழமை) நடக்கிறது.

-அமுதவன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →