Loading...
You are here:  Home  >  Community News  >  Current Article

Jaya’s  disproportionate  assets  case : Karnataka lawyer’s 3rd  day’s  argument.  SC  postpones  case  to  March  10th.

By   /  February 26, 2016  /  Comments Off on Jaya’s  disproportionate  assets  case : Karnataka lawyer’s 3rd  day’s  argument.  SC  postpones  case  to  March  10th.

    Print       Email

உச்சநீதிமன்றத்தில் நடந்துவரும் ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்கு; கர்நாடக வழக்கறிஞரின் 3வது நாள் வாதம்!

28TH_JAYA-5P9_2129324fஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கு மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமித்வா ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

InCorpTaxAct
Suvidha

கர்நாடக அரசின் மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே 3-ம் நாளாக இறுதிவாதத்தை தொடர்ந் தார். அவர் வாதிடுகையில், “மிகவும் பிரம்மாண்டமாக நடத்தப்பட்ட‌ சுதாகரனின் திருமணத்துக்கு பெரிய பந்தல், பிரம்மாண்ட மேடை, அலங் கார வளைவுகள் போன்றவைக்கு ரூ. 7 கோடி செலவு செய்யப்பட்டது. இதை தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் விசாரித்து அரசு சான்று ஆவணங்களில் குறிப்பிட்டுள்ளனர். இதில் நீதிபதி குன்ஹா ரூ. 3 கோடியை மட்டும் திருமண செலவாக ஏற்றுக்கொள்வதாக கூறியுள்ளார். ஆனால் நீதிபதி குமாரசாமி ரூ. 28 லட்சம் மட்டுமே சுதாகரனின் திருமணத்துக்காக ஜெயலலிதா செலவு செய்தார். மீதி செலவை மணமகளின் தாய்மாமன் ராம்குமார் சிவாஜி கணேசன் செலவு செய்துள்ளார் என தனது தீர்ப்பில் கூறியுள்ளார்” என்றார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி பினாகி சந்திரகோஷ், ‘சுதாகரனின் திருமண செலவு தொடர்பான கணக்குகள் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையில் ஒருவிதமாக இருக்கிறது. கர்நாடக அரசு வேறு விதமாக கூறுகிறது. ஜெயலலிதா தரப்பு புதுவிதமாக சொல்கிறார்கள். நீதிபதி குன்ஹா ஒரு கணக்கை குறிப்பிடுகிறார். நீதிபதி குமாரசாமி வேறொரு கணக்கை தீர்ப்பில் குறிப்பிடுகிறார். இதனை சரியாக புரிந்துக்கொள்ள தேவையான அரசு சான்று ஆவணங்கள், சாட்சிகளின் வாக்குமூலம், தீர்ப்பு நகல்கள், குற்றம்சாட்டப்பட்டவர்களின் சான்றுகள், அனைத்து தரப்பு சாட்சி பட்டியல் ஆகியவற்றை அனைத்து தரப்பினரும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுங்கள்”என்றார்.

இதற்கு கர்நாடக அரசு வழக் கறிஞர் துஷ்யந்த் தவே, “இந்த வழக்கு குறித்த ஆவணங்கள் அனைத்தும் ஜெயலலிதா தரப் பினரிடமும் த‌மிழக லஞ்ச ஒழிப்பு துறையினரிடம்தான் இருக்கிறது. எனவே வழக்கு குறித்த அனைத்து ஆவணங்களின் தொகுப்பையும் வழங்க இரு தரப்புக்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்” என்றார். அதற்கு ஜெயலலிதாவின் வழக்கறிஞர் சேகர் நாப்டே, “கர்நாடக அரசு கோரும் அரசு சான்று ஆவணங்கள், அனைத்து தரப்பு சாட்சி பட்டியல் ஆகியவை ஆயிரம் பக்கங்களுக்கு அதிகமாக இருக்கிறது. எனவே அவற்றை நகல் எடுத்து வழங்குவதற்கு 3 நாட்கள் கால அவகாசம் வழங்க வேண்டும்”என்றார்.

இதையடுத்து கர்நாடக அரசு வழக்கறிஞர் துஷ்யந்த் தவே, “எங்களுக்கு வழங்கப்படும் ஆவணங்களை வாசித்து, குறிப் பெடுக்க ஒரு வார கால அவகாசம் வழங்க வேண்டும்”என கோரிக்கை விடுத்தார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி பினாகி சந்திர கோஷ், “மார்ச் 9-ம் தேதி வரை எனக்கு பல்வேறு வழக்குகளை விசாரிக்க வேண்டியுள்ளது. எனவே சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கு விசாரணையை மார்ச் 10-ம் தேதிக்கு ஒத்திவைக்கிறேன்”என உத்தரவிட்டார்.

-அமுதவன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →