Loading...
You are here:  Home  >  Politics  >  Delhi Politics  >  Current Article

JNU row, Rahul meets President.

By   /  February 18, 2016  /  Comments Off on JNU row, Rahul meets President.

    Print       Email

Rahul_2741620g_2741720fஜேஎன்யூ மாணவர்கள் போராட்டம் தொடர்பாக குடியரசுத் தலைவரைச் சந்தித்தார் ராகுல்.

ஜேஎன்யூ மாணவர்கள் போராட்ட சர்ச்சை தொடர்பாக குடியரசுத் தலைவரிடம் மனு கொடுத்துவிட்டு செய்தியாளர்களிடம் பேசிய ராகுல், “அமைப்புகளை அடக்கி ஆள்வது ஓர் அரசாங்கத்தின் வேலையல்ல. இது நாட்டின் கவுரவத்தின் மீது படிந்துள்ள கறை” என்றார்.

InCorpTaxAct
Suvidha

ஜேஎன்யூ மாணவர் சங்கத் தலைவர் கைது, அதனைத் தொடர்ந்து நடைபெறும் சர்ச்சைகள் தொடர்பாகவும் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி சந்தித்து முறையிட்டார்.

ராகுல் காந்தியுடன் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் குலாம் நபி ஆசாத், மல்லிகார்ஜுன கார்கே ஆகியோரும் குடியரசுத் தலைவரை சந்தித்தனர்.

இந்த சந்திப்புக்குப் பின் செய்தியாளர்களிடம் ராகுல் காந்தி பேசும்போது, “அண்மையில் ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகத்தில் ரோஹித் வெமுலா என்ற ஒரு தலித் ஆராய்ச்சி மாணவர் தற்கொலை செய்து கொண்டார். அவரது அந்த முடிவுக்கு இந்துத்துவா அமைப்புகளே காரணம்.

அமைப்புகளை அடக்கி ஆள்வது ஓர் அரசாங்கத்தின் வேலையல்ல. அரசின் இத்தகைய நடவடிக்கைகளால் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் ஒரு தவறான முன்னுதாரணம் உருவாக்கப்படுகிறது. இது இத்தேசத்தின் கவுரவத்தின் மீதான கறையாகும்.

நான் தேசத் துரோகிகளுக்கு ஆதரவு அளிப்பதாக சிலர் விமர்சிக்கின்றனர். ஆனால் உண்மை என்னவென்றால் என் ரத்தத்தில் தேசியவாதம் ஊறியிருக்கிறது. எனது குடும்பத்தினர் இத்தேசத்துக்காக பெரும் தியாகங்கள் செய்துள்ளனர்” என்றார்.

டெல்லியில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு வன ராஜ்ஜியம் நடப்பதாக கூறிய காங்கிரஸ் கட்சி, போலீஸ் கமிஷனர் பி.எஸ்.பாஸ்ஸி பதவி விலக வேண்டும் என  வலியுறுத்தியிருந்தது  குறிப்பிடத்தக்கது.

-அமுதவன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →