Loading...
You are here:  Home  >  Featured News  >  Current Article

K.R.Ramaswamy has been selected Leader of Congress Party in TN Assembly.

By   /  May 30, 2016  /  Comments Off on K.R.Ramaswamy has been selected Leader of Congress Party in TN Assembly.

    Print       Email

ramasamy_2874564fதமிழக சட்டமன்ற காங்கிரஸ் தலைவராக கே.ஆர்.ராமசாமி தேர்வு  கொறடாவாக விஜயதாரணி. .

தமிழக சட்டமன்ற தேர்தலில் 134 இடங்களில் அதிமுக கூட்டணி வெற்றி பெற்று தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்துள்ளது. திமுக கூட்டணி 98 இடங்களில் வெற்றி பெற்றது. அதில் காங்கிரஸ் கட்சி 8 இடங்களில் வெற்றி பெற்றது.

InCorpTaxAct
Suvidha

தேர்தலை தொடர்ந்து வெற்றி பெற்ற அனைத்து கட்சிகளும் தங்களது கட்சியின் சட்டமன்ற குழு தலைவர்களை அறிவித்து வந்தனர். ஆனால் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற குழு தலைவர் யார் என்பது அறிவிக்கப்படாமல் இழுபறி நிலை இருந்து வந்தது.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற தலைவராக காரைக்குடி எம்.எல்.ஏ கே.ஆர்.ராமசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். விளவங்கோடு எம்.எல்.ஏ விஜயதாரணி காங்கிரஸ் கட்சியின் கொறடாவாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

சென்னையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் இதனை அறிவித்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர் திமுகவுடன் இணைந்து சட்டமன்றத்தில் ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக காங்கிரஸ் செயல்படும் என்றார். தஞ்சாவூர், அரவக்குறிச்சி தொகுதிகளில் தேர்தல் ரத்து செய்யப்பட்டதற்கு இளங்கோவன் எதிர்ப்பு தெரிவித்தார்.

-அமுதவன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →