Loading...
You are here:  Home  >  Community News  >  Current Article

Kabali Teaser released: Rajini in his unique style.

By   /  May 1, 2016  /  Comments Off on Kabali Teaser released: Rajini in his unique style.

    Print       Email

ரஜினியின் கபாலி டீசர்; ரசிகர்களிடேயே அமோக வரவேற்பு. rajni

ரஜினிகாந்தின் நடிப்பில் மிக பிரமாண்டமாக உருவாகியுள்ள ‘கபாலி’ படத்தின் டீசர் வெளியானது. ரஜினியின் அசத்தலான ஸ்டைலில் வெளியாகியுள்ள இந்த டீசர் காட்சிகள் அவரது ரசிகர்களை மகிழ்ச்சியிலும், பரவசத்திலும் ஆழ்த்தி வருகிறது. இந்த டீசர் வெளியான ஒருமணி நேரத்துக்குள் சுமார் 90 ஆயிரம் லைக்-களை வாரிகுவித்துள்ளது, அவரது சூப்பர் ஸ்டார் அந்தஸ்து இன்னும் அவரிடமே உள்ளது, என்பதை தெளிவுப்படுத்துகிறது.

InCorpTaxAct
Suvidha

பரபரப்பான இசையின் பின்னணியில் ரஜினி அறிமுகம் ஆகும் காட்சியும், அவர் தாதாவாக மாறிய காரணத்தை விளக்கி, ‘தமிழ் படங்கள்ல, இங்க மரு வச்சிகிட்டு, மீசையை முறுக்கிக்கிட்டு, லுங்கியை கட்டிக்கிட்டு, நம்பியார்..’ ஏய் கபாலி’ ., அப்டின்னு சொன்னஉடனே, குனிஞ்சி ’சொல்லுங்க எஜமான்’..-னு அப்டி வந்து நிப்பானே, அந்த மாதிரி கபாலி-ன்னு நினைச்சியாடா,?’ …..என்ற இடங்களில் ரஜினி வெளிப்படுத்தும் பாவனைகளும், உச்சகட்டமாக, “கபாலிடா” என தனக்கேயுரித்தான கம்பீர ஸ்டைலில் தன்னுடைய விஸ்வரூபத்தை விரல் அளவால் வெளிப்படுத்தி உயரத்தில் காட்டும் இடத்திலும், அன்றும்.., இன்றும்.., என்றும்.., தமிழ் சினிமாவின் ஒரே ’ஸ்டைல் மன்னன்’ நான்தான் என்பதை ரஜினி இந்த டீசரின் மூலம் நிரூபித்துள்ளார்.

-ரயன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →