கருணாநிதிக்கு எதிராக காயிதே மில்லத் பேரன் திருவாரூரில் போட்டி?
திமுக தலைவர் கருணாநிதி மீண்டும் திருவாரூர் தொகுதியில் போட்டியிடுவதாகச் செய்திகள் வெளியாகின்றன. இந்நிலையில் அதிமுக ஆதரவுடன் அவரை எதிர்த்துப் போட்டியிட, சுதந்திரப்போராட்ட வீரரும் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் நிறுவனருமான காயிதே மில்லத்தின் பேரன் தாவூது மியாகான் களம் இறங்குவார் என்று தெரிகிறது, கூட்டணியில் இருக்கும் அவர், தனது விருப்பத்தை அதிமுக தலைமையிடம் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்பும் கருணாநிதியை தேர்தல் களத்தில் சந்தித்தவர்தான் தாவூது மியாகான்.
சேப்பாக்கம் தொகுதியில் 2006 சட்டசபைத் தேர்தலில் கருணாநிதி போட்டியிட்டபோது, அதிமுகவின் ஆதரவோடு சுயேச்சை சின்னத்தில் அவரை எதிர்த்துப் போட்டியிட்டார். 8,526 வாக்குகள் வித்தியாசத்தில்தான் கருணாநிதி வென்றார் என்பது குறிப்பிடத் தக்கது.
-அமுதவன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.