தமிழ்நாட்டைச் சேர்ந்த கர்நாடகப் பாடகர் டி.எம்.கிருஷ்ணா மற்றும் பெஜவாடா வில்சன் ஆகியோருக்கு மகசேசே விருது.
பிலிப்பைன்ஸ் அரசின் உடன்பாட்டுடன் அந்நாட்டு அதிபர் மறைந்த ரமோன் மகசேசே நினைவாகவும், அவரது அரசியல் நேர்மை, மக்கள் சேவை போன்றவற்றை வளரும் நாடுகளில் பரப்பும் வகையிலும் கடந்த 1957-ம் ஆண்டுமுதல் ராமன் மகசேசே விருது வழங்கப்பட்டு வருகிறது.
சிறந்த சேவைக்கான ராமன் மகசேசே விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. அவ்வகையில், கர்நாடக மாநிலத்தில் மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் கொடுமைக்க்கு எதிராக நாடு தழுவிய அளவில் போராடிய சமூக சேவகர் தங்கவயல் வில்சன் மற்றும் சென்னையை சேர்ந்த கர்நாடக பாடகர் டி.எம். கிருஷ்ணா ஆகியோர் இந்த ஆண்டுக்கான ராமன் மகசேசே விருதுக்கு தேர்வாகியுள்ளனர்.
இவர்களை தவிர பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த கோன்சிடா கர்பியோ மோரேல்ஸ், இந்தோனேசியாவை சேர்ந்த டோம்பெட் துவாபா, ஜப்பானை சேர்ந்த தன்னார்வல தொண்டு நிறுவனம் மற்றும் லாவோஸ் தொண்டு நிறுவனத்துக்கு இந்த ஆண்டுக்கான இவ்விருது வழங்கப்படவுள்ளது.
-அமுதவன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.