எனக்கு லஞ்சம் கொடுக்க முன்வந்தனர்- கர்நாடகத் தலைமை நீதிபதி பகீர் தகவல்.
கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருப்பவர் எஸ்.கே.முகர்ஜி. இவர் கடந்த செவ்வாய்க் கிழமை சொத்து தகராறு தொடர்பான வழக்கை விசாரிக்கும் போது அதிர்ச்சியளிக்கும் செய்தி ஒன்றை வெளியிட்டார். இந்த வழக்கில் சாதகமான தீர்ப்பு அளிக்கும்படி ஒருவர் தனக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக நீதிபதி தெரிவித்தார். நீதிமன்ற வளாகத்தில் இருந்தவர்கள் இதனை கேட்டு அதிர்ச்சியடைந்தனர்.
கர்நாடக அரசுக்கும் உம்ரா டெவலப்பர்கள் நிறுனத்திற்கும் இடையிலான இந்த வழக்கில், ஒருதரப்புக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கும்படி ஒருவர் தன்னை வீட்டில் வந்து சந்தித்ததாகவும், ஆனால் அவரை தான் திருப்பி அனுப்பிவிட்டதாகவும் நீதிபதி முகர்ஜி தெரிவித்தார். மக்கள் தங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்தை தவறாக பயன்படுத்தக் கூடாது என்றும் நீதிபதி கூறியுள்ளார்.
ஆனால், உம்ரா டெவலப்பர்ஸ் நிறுவன பிரதிநிதிகள் யாரும் நீதிபதியின் வீட்டுக்கு செல்லவில்லை என அவர்களின் வழக்கறிஞர் தெரிவித்தார்.
-அமுதவன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.