Loading...
You are here:  Home  >  Community News  >  Current Article

Karnataka CM Siddaramaiah’s son passes away

By   /  July 30, 2016  /  Comments Off on Karnataka CM Siddaramaiah’s son passes away

    Print       Email

201607301652380648_Karnataka-Chief-Minister-Siddaramaiah-s-son-passes-away_SECVPFகர்நாடக முதல்வர் சித்தராமையாவின் மகன் காலமானார்: பெல்ஜியம் மருத்துவமனையில் உயிர் பிரிந்தது

கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் மகன் ராகேஷ். இவர் தனது நண்பர்களுடன் கடந்த 21-ம் தேதி பெல்ஜியம் நாட்டுக்குச் சென்றார். உலகின் மிகப்பெரிய எலக்ட்ரானிக்ஸ் மியூசிக் திருவிழாவில் பங்கேற்க சென்றிருப்பதாக அவருடன் சென்ற நண்பர்கள் பேஸ்புக் மூலம் பதிவு செய்திருந்தனர்.

InCorpTaxAct
Suvidha

இந்நிலையில், பெல்ஜியத்தில் ராகேஷுக்கு திடீரென கடும் வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அன்ட்வெர்ப் நகரில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

பெல்ஜியம் சென்ற இடத்தில் ராகேஷ் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பதாகவும், அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாகவும் முதல்வர் சித்தராமையாவின் டுவிட்டரில் தெரிவிக்கப்பட்டது. அத்துடன், மகனை பார்ப்பதற்காக சித்தராமையா வியாழக்கிழமை அவசரமாகப் புறப்பட்டுச் சென்றார்.

இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராகேஷ், இன்று சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். உடல் உறுப்புகள் செயலிழந்ததால் அவர் மரணம் அடைந்ததாக தெரிய வந்துள்ளது.

-அமுதவன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →