Loading...
You are here:  Home  >  Movies  >  Bollywood  >  Current Article

Karnataka government shut down Sunny Leone’s New Year bash following protests

By   /  December 17, 2017  /  Comments Off on Karnataka government shut down Sunny Leone’s New Year bash following protests

    Print       Email

புத்தாண்டு விழா: சன்னி லியோன் பங்கேற்க கர்நாடக அரசு தடை

 

InCorpTaxAct
Suvidha

 

 

விரைவில் பிறக்கவுள்ள புத்தாண்டை முன்னிட்டு கர்நாடக மாநில தலைநகரான பெங்களூருவில் உள்ள நகவாரா பகுதியில் இருக்கும் ஒயிட் ஆர்ச்சிட் நட்சத்திர விடுதியில் வரும் 31-ம் தேதி பின்னிரவில் புத்தாண்டு விழா கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த நிகழ்ச்சியை நடத்த கூடாது. ஆபாச நடிகை சன்னி லியோனை இங்கு அனுமதிக்க கூடாது என சில கன்னட அமைப்பினர் கடந்த ஒருவாரமாக போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். சில இடங்களில் சன்னி லியோனின் கொடும்பாவிகளும் எரிக்கப்பட்டன. பெருகிவரும் எதிர்ப்பினால் இந்த நிகழ்ச்சிக்கு இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை என பெங்களூரு நகர போலீஸ் கமிஷனர் சுனீல் குமார் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், பெங்களூரு நகரில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கர்நாடக மாநில உள்துறை மந்திரி ராமலிங்க ரெட்டி, இதைப்போன்ற நிகழ்ச்சிகளுக்கு அனுமதி அளிக்க கூடாது என அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

மக்கள் எதிர்ப்பதால் சன்னி லியோனை இங்கு அழைத்து வர கூடாது. நமது பாரம்பரியமான கன்னட இலக்கியம், கலாசாரம் தொடர்பான நிகழ்ச்சிகளுடன் புத்தாண்டை அவர்கள் கொண்டாடட்டும் எனவும் குறிப்பிட்டார்.

மேலும், கடந்த புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது பெங்களூரு மகாத்மா காந்தி சாலையில் ஒரு பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கர்நாடக ஐகோர்ட் பிறப்பித்திருந்த உத்தரவுக்கிணங்க சட்டம் – ஒழுங்கு பிரச்சனை ஏற்பட கூடாது என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

 

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →