Loading...
You are here:  Home  >  Daily News  >  Current Article

Karnataka Government to probe Rs 2 crore bribes from Sasikala in Parappana Agrahara jail.

By   /  November 16, 2017  /  Comments Off on Karnataka Government to probe Rs 2 crore bribes from Sasikala in Parappana Agrahara jail.

    Print       Email

சிறையில் சலுகைகள் பெற சசிகலா ரூ.2 கோடி கொடுத்தாரா?: விசாரணை கமி‌ஷன் அமைக்க கர்நாடக அரசு முடிவு.

 

InCorpTaxAct
Suvidha

 

 

பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் சசிகலா மற்றும் தெல்கி உள்ளிட்ட கைதிகளுக்கு சிறப்பு சலுகைகள் அளிக்க சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி. சத்தியநாராயணராவ் ரூ. 2 கோடி லஞ்சம் வாங்கியதாக டி..ஜி. ரூபா குற்றம்சாட்டி இருந்தார்.

இது குறித்து ஓய்வு பெற்ற ..எஸ். அதிகாரி வினய்குமார் தலைமையில் ஆன உயர்மட்டக்குழு விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

அதில் சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டது உண்மை தான் என்றும், சிறையில் விதிமுறை மீறல்கள் நடந்துள்ளன என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது. எதிர்காலத்தில் சிறையில் என்னென்ன மாற்றங்களை செய்ய வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஆனால் ரூ. 2 கோடி லஞ்சம் வாங்கிய விவகாரம் குறித்து உயர்மட்டக்குழு விசாரணை அறிக்கையில் அதிகமாக எதுவும் குறிப்பிடவில்லை. ரூ. 2 கோடி லஞ்சம் வாங்கியதற்கான ஆதாரம் இல்லை என்றாலும் இது குறித்து லஞ்ச ஒழிப்பு படை தனியாக விசாரணை நடத்தி வருவதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

இந்த விவகாரம் குறித்து கர்நாடக லஞ்ச ஒழிப்பு படையினர் விசாரணை நடத்தி வந்தாலும் இதுவரை இந்த விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை.

இந்த நிலையில் ஒரு நபர் விசாரணை கமிஷன் அமைத்து இது குறித்து விசாரிக்க கர்நாடக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ரூ. 2 கோடி லஞ்ச விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்ட சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி. சத்தியநாராயணராவ் ஏற்கனவே ஓய்வு பெற்றுவிட்டார். ஆனால் அவர் மீது குற்றம் சுமத்திய டி..ஜி. ரூபா சிறைத்துறையில் இருந்து மாற்றப்பட்டு பெங்களூரு மாநகர சாலை பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து பிரிவில் கமிஷனராக பணியாற்றி வருகிறார்.

உயர்மட்டக்குழு விசாரணை அறிக்கை குறித்து டி..ஜி. ரூபா கூறியதாவது:-

நான் முறையாக விசாரித்து அளித்த அறிக்கையை, தற்போது வினய்குமார் தலைமையிலான குழுவின் அறிக்கை உறுதி செய்துள்ளது. ஆனால் டி.ஜி.பி.யாக இருந்த சத்தியநாராயணராவ் என் புகாரை சந்தேகித்து வேறு துறைக்கு மாற்றியது இப்போது தவறு என நிரூபிக்கப்பட்டுள்ளது.

இந்த முறைகேட்டுக்கு காரணமான அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் ஊழல் அதிகாரிகளை தப்பிக்க விடக்கூடாது.

சிறை முறைகேட்டை விசாரித்த வினய்குமார் குழு, நான் தெரிவித்த லஞ்ச புகார் குறித்து விசாரிக்காதது ஏன்? சசிகலாவுக்கு சிறப்பு சலுகை காட்டியதாக எனக்கு ஏராளமான புகார் கடிதங்கள் வந்துள்ளன. ஊடகங்களில் சில போலீசார் பெயரை குறிப்பிடாமல் பேட்டி அளித்துள்ளனர்.

இந்த சூழலில் சத்திய நாராயணராவ் உள்ளிட்டோரிடம் லஞ்சம் விவகாரம் குறித்து ஏன் விசாரிக்கவில்லை என்பது எனக்கு புரியவில்லை.

ஒருவேளை விசாரணைக் குழுவுக்கு அதிகாரம் இல்லையென்றால், இதை விசாரிக்க ஊழல் தடுப்பு துறைக்கு உத்தரவிட வேண்டும். சசிகலா உள்ளிட்டோருக்கு எவ்வளவு காலம் சலுகை வழங்கப்பட்டது? எவ்வளவு பணம் கை மாறியது? என ஊழல் தடுப்பு, லோக் ஆயுக்தா உள்ளிட்ட துறையினர் விசாரணை நடத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

GATeS 15 th Anniversary and Telangana Formation Day Celebrations

Read More →