Loading...
You are here:  Home  >  Deccan Abroad  >  Current Article

Karnataka’s Shankara Murthy may be appointed as T.N Governor.

By   /  August 12, 2016  /  Comments Off on Karnataka’s Shankara Murthy may be appointed as T.N Governor.

    Print       Email

Shri-D.H-Shankaramurthyதமிழக புதிய கவர்னராக சங்கரமூர்த்தி நியமனம்.?

தமிழக கவர்னராக இருக்கும் ரோசய்யாவின் பதவிக்காலம் வருகிற 31-ந்தேதியுடன் முடிவடைகிறது.

InCorpTaxAct
Suvidha

இதையடுத்து தமிழ்நாட்டுக்கு புதிய கவர்னராக யாரை நியமனம் செய்யலாம் என்று மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.

இந்த நிலையில் பா.ஜ.க. தேசியத் தலைவர் அமித்ஷா சமீபத்தில் கர்நாடகா மாநில பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவரான சங்கர மூர்த்தியை அழைத்து பேசினார். அப்போது “புதிய பொறுப்பு ஏற்க தயாராக இருங்கள்” என்று சங்கர மூர்த்தியிடம் அமித்ஷா கேட்டுக் கொண்டார். சங்கர மூர்த்திக்கு கவர்னர் பதவி வழங்கும் திட்டத்துடன் அமித்ஷா இப்படி கூறியதாக கூறப்படுகிறது.

அதை சங்கரமூர்த்தி மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டார். அதே சமயத்தில் தென் இந்தியா கலாச்சாரத்துடன் ஒன்றிவிட்டதால், புதிய பொறுப்பு எது தந்தாலும், தென் இந்தியாவில் இருக்குமாறு தரும்படி அமித்ஷாவிடம் சங்கரமூர்த்தி வேண்டுகோள் விடுத்தார். அதை அமித்ஷாவும் ஏற்றுக் கொண்டார்.

இது தொடர்பாக சங்கர மூர்த்தி கூறுகையில், “எனக்கு புதிய பொறுப்பு தருவது பற்றி முடிவு செய்துள்ளனர். இன்னும் சில தினங்களில் அது பற்றி மத்திய அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடும்” என்றார்.

சங்கரமூர்த்தி தமிழக கவர்னராக நியமனம் செய்யப்படலாம் என்று உறுதி செய்யப்படாத தகவல்கள் வெளியாகி உள்ளது. அவர் தமிழக கவர்னராக நியமிக்கப்படாவிட்டால் ஆந்திரா அல்லது தெலுங்கானா கவர்னராக நியமிக்கப்படுவது உறுதி என்று தெரிகிறது.

தெலுங்கானா மாநிலம் உருவாக்கப்பட்ட பிறகு இதுவரை கவர்னர் நியமிக்கப்படவில்லை. ஆந்திர கவர்னர் நரசிம்மன் தெலுங்கானா கவர்னர் பொறுப்பை கூடுதலாக கவனித்து வருகிறார். எனவே ஆந்திரா கவர்னராக சங்கரமூர்த்தி தேர்வாகவும் வாய்ப்புள்ளது.

76 வயதாகும் சங்கர மூர்த்தி கர்நாடகா மாநிலம் ஷிவமோகா மாவட்டத்தைச் சேர்ந்தவர். வைசிய இனத்தைச் சேர்ந்த அவர் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் தீவிர பற்று கொண்டார். ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் பல முக்கிய பதவிகளை அவர் ஏற்கனவே வகித்துள்ளார்.

தற்போது அவர் கர்நாடகா சட்டசபை மேல்சபை தலைவராக உள்ளார். மேலவையில் 1988-ம் ஆண்டு முதல் உறுப்பினராக இருந்து வரும் அவருக்கு 2018-ம் ஆண்டு வரை பதவிக்காலம் உள்ளது.

எதிர்க்கட்சித் தலைவராக பணியாற்றியுள்ள அனுபவமும் இவருக்கு இருக்கிறது. கர்நாடகா முன்னாள் பா.ஜ.க. முதல்-மந்திரி எடியூரப்பாவின் நெருங்கிய நண்பரான இவர் கர்நாடகா பா.ஜ.க. வளர்ச்சிக்கு பல வகைகளில் துணை புரிந்துள்ளார்.

குமாரசாமி தலைமையில் பா.ஜ.க. – மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆட்சி அமைந்த போது இவர் கல்வி மந்திரியாக இருந்தார். இந்திராகாந்தி அவசர நிலையை பிரகடனம் செய்த போது இவர் எதிர்ப்பு போராட்டம் நடத்தியதால் கைது செய்யப்பட்டு 19 மாதம் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

அவரது அரசியல் பணிகளை கவுரவிக்கும் வகையில் அவரை கவர்னர் அந்தஸ்துக்கு உயர்த்த அமித்ஷாவும் மோடியும் முடிவு செய்துள்ளனர்.

-அமுதவன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →