Loading...
You are here:  Home  >  Featured News  >  Current Article

Karthik– yester year hero, Wants  to  join  DMK  alliance

By   /  March 3, 2016  /  Comments Off on Karthik– yester year hero, Wants  to  join  DMK  alliance

    Print       Email

karthik-muthuramanதிமுக-காங்கிரஸ் கூட்டணியில் சேருவோம் – நடிகர் கார்த்திக் அறிவிப்பு.

நடிகர் கார்த்திக் 2006–ம் ஆண்டு அரசியலில் குதித்தார். அவருக்கு பார்வர்டு பிளாக் கட்சியின் தலைவர் பதவி கிடைத்தது.

InCorpTaxAct
Suvidha

2006 சட்டசபை தேர்தலில் பார்வர்டு பிளாக் கட்சி 111 தொகுதிகளில் தனித்து போட்டியிட்டது. ஆனால் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. இதனால் மனம் உடைந்த கார்த்திக் 2008–ல் நாடாளும் மக்கள் கட்சி என்ற புதிய கட்சியை தொடங்கினார்.

இந்த கட்சி சார்பில் சிவகாசி தொகுதியில் போட்டியிட்ட அவர் வெற்றி வாய்ப்பை இழந்தார். கடந்த சட்டசபை தேர்தலில் 29 தொகுதிகளில் இவரது கட்சி தனித்து போட்டியிட்டது.

2014 பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளித்தார். அந்த கட்சிக்காக தேர்தல் பிரசாரத்திலும் ஈடுபட்டார்.

வருகிற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வுடன் கூட்டணி சேர கார்த்திக் முடிவு செய்திருப்பதாகவும் தி.மு.க.வுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் தெரிகிறது.

தி.மு.க. கூட்டணியில் தனது கட்சிக்கு வெற்றி வாய்ப்பு உள்ள 10 தொகுதிகளை கார்த்திக் கேட்பதாகவும் சொல்லப்படுகிறது. எத்தனை தொகுதிகள் என்பது பேச்சுவார்த்தைக்கு பிறகு சுமூகமாக முடிவு செய்யப்படும் என்று அவரது கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

வருகிற 6–ந்தேதி நெல்லையில் கார்த்திக் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. அப்போது தி.மு.க.வுடன் கூட்டணி சேர்வது குறித்து முடிவு செய்து அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

-அமுதவன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →