Loading...
You are here:  Home  >  Featured News  >  Current Article

Karunanidhi  and  Stalin  having  different  opinion  on Vijayakanth –says Thirumavalavan

By   /  March 22, 2016  /  Comments Off on Karunanidhi  and  Stalin  having  different  opinion  on Vijayakanth –says Thirumavalavan

    Print       Email

maxresdefault (5)கலைஞரும் ஸ்டாலினும் விஜயகாந்த் பற்றி வெவ்வேறு மதிப்பீடுகளை வைத்திருக்கிறார்கள் – திருமாவளவன் கூறுகிறார்.

தி.மு.க. கூட்டணிக்கு தே.மு.தி.க. வரலாம் இன்னும் நம்பிக்கை இழக்கவில்லை என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

InCorpTaxAct
Suvidha

அக்கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலினோ கூட்டணி கட்சிகளுக்கு அமைச்சரவையில் இடமில்லை என்று திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவனிடம் கருத்து கேட்கப்பட்டது.

கேள்வி:– தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தி.மு.க. கூட்டணிக்கு வர வாய்ப்பு உள்ளது. கூட்டணி பற்றி பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறியுள்ளாரே?

பதில்:– நண்பர் விஜயகாந்த் தான் ‘கிங்’ ஆகத்தான் இருப்பேன். கிங் மேக்கராக இருக்க விரும்பவில்லை என்று காஞ்சீபுரம் மாநாட்டில் கூறினார். அதன் பின்னர் அவர் தனி அணி அமைத்து சட்டசபை தேர்தலை சந்திப்பேன் என்று தெளிவுப்படுத்தினார்.

அதன் பிறகும் விஜயகாந்த் தங்களது அணியில் இணைய வேண்டும் என்று கருணாநிதி முயற்சி செய்து கொண்டு இருக்கிறார். இடைவிடாமல் சலிப்பு இல்லாமல் அவர் மேற்கொள்ளும் தொடர் முயற்சியை நான் பாராட்டுகிறேன். அவரிடம் நான் கற்றுக்கொள்ள வேண்டிய அரிய தலைமை பண்பை நான் பார்க்கிறேன்.

ஆனால் நண்பர் விஜயகாந்த் தனது நிலையில் உறுதியாக இருப்பார் என்று நான் நம்புகிறேன். அவர் அடைய வேண்டிய நோக்கத்திற்கு உடன்பட்டு வருகிற மக்கள் நலக்கூட்டணியோடு இணைய வேண்டும் என்பது தான் எங்கள் விருப்பம் எங்கள் முயற்சி.

கேள்வி:– தி.மு.க. கூட்டணி கட்சிகளுக்கு அமைச்சரவையில் இடமில்லை என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாரே?

பதில்:– தே.மு.தி.க.– தி.மு.க. இணைவதாக இருந்தால் அமைச்சரவையில் இடம் வேண்டும் என்றும் துணை முதல்வர் பதவி வேண்டும் என்றும் விஜயகாந்த் தொடர்ந்து வலியுறுத்தி வருவதாக தெரிகிறது.

ஆனால் மு.க.ஸ்டாலின் கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சியில் இடமில்லை என்று சொல்வதன் மூலம் தி.மு.க. அணியில் விஜயகாந்தை சேர்த்து கொள்ள அவர் விரும்பவில்லை என்பது இதில் இருந்து தெரிய வருகிறது.

இவ்வாறு திருமாவளவன் கூறினார்.

-அமுதவன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →