Loading...
You are here:  Home  >  Featured News  >  Current Article

Karunanidhi  – I criticize BJP policies

By   /  February 19, 2016  /  Comments Off on Karunanidhi  – I criticize BJP policies

    Print       Email

32565595.cmsபாஜகவின் கருத்து சுதந்திரம் மற்றும் மருத்துவக் கொள்கைகளுக்கு எதிராக கருணாநிதி கருத்து.

திமுக தலைவர் கருணாநிதி மத்திய அரசின் மருத்துவக் கொள்கைகளுக்கு எதிராகவும் ஜேஎன்யூ போராட்டம் பற்றியும் முதல்முறையாக கருத்துத் தெரிவித்துள்ளார். கேள்வி பதில் வடிவிலான அவரது அறிக்கை..

InCorpTaxAct
Suvidha

கேள்வி :- மத்திய பா.ஜ.க. அரசு மக்களுக்குப் பிடிக்காத, வேண்டாத பல காரியங்களை அமைதி யாகச் செய்து விட்டு வேடிக்கை பார்க்கிறதே?

கலைஞர் :- அப்படிப் பல காரியங்களைச் சொல்ல முடியும். அண்மைக் காலத்தில் நடைபெற்ற ஒன்றைச் சொல்ல வேண்டுமென்றால், புற்றுநோய், எய்ட்ஸ், எலும்பு நோய்கள்,  ரத்தக் கசிவு  போன்ற  76 வகை நோய்களுக்கான மருந்துகளுக்கு இதுவரை வழங்கப் பட்டு வந்த இறக்குமதி வரிச் சலுகையை கடந்த வாரம் மத்திய அரசு ரத்து செய்திருக்கிறது.  இதன் காரணமாக அந்த மருந்துகளின் விலை  30 சதவிகிதம் வரையில் உயரும். இலட்சக்கணக்கான ஏழையெளிய மக்களின் நோயுடன் மிக நேரடியாகத் தொடர்புடைய இந்த விலை உயர்வு   அவர்களைப் பெரிதும் பாதிக்கும். இறக்குமதி செய்யப்படும் மருந்துகளால்  விலையில் பெரிய பாதிப்பு வராது என்ற கருத்தும் ஒரு சிலரால் கூறப்படுகிறது.  மத்திய அரசின் இந்த முடிவு சாதாரண மக்களை நேரடியாகப் பாதிக்கிறதா என்பதை சில வாரங்களுக்குப் பின்தான் உறுதியாகக் கூற முடியும்.

கேள்வி :- மாணவர்களின் கருத்துச் சுதந்திரத்தில் மத்திய பா.ஜ.க. அரசு அதிகமாகத் தலையிடு கிறது, தடை போட நினைக்கிறது என்ற குற்றச்சாட்டு பற்றி?

கலைஞர்  :- மத்திய அரசின் அண்மைக் காலச் செயல்பாடுகள் இந்தக் கருத்தைத்தான் தெரிவிக் கின்றன. இந்திய உயர் கல்வி நிலையங்களில்  கல்விக்குச் சற்று அப்பால் மாணவர்கள் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டால்,  உடனே மத்திய அரசு அதிக அளவுக்கு ஆத்திரம் கொள்கிறது.  சில வாரங் களுக்கு முன்னால் ஐதராபாத் மத்தியப் பல்கலைக் கழக ஆய்வு மாணவர், ரோகித் வெமுலா, மத்திய அரசை விமர்சித்து மேற்கொண்ட போராட்டம் காரணமாக அவர் இடைநீக்கம் செய்யப்பட்டு வெளியேற்றப்பட்டதும், உதவித் தொகை நிறுத்தப்பட்டதும் மனம் நொறுங்கி தற்கொலை செய்து கொண்டு மாண்டதுமான நிகழ்வு நடைபெற்றது.     சில மாதங்களுக்கு முன்பு, சென்னை ஐ.ஐ.டி.யில்  “அம்பேத்கர் பெரியார் வாசிப்பு வட்டம்”  தடை செய்யப் பட்ட சம்பவமும் இப்படிப்பட்டதுதான்.  இதன் தொடர்ச்சியாகத்தான் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகச் சம்பவம். ஜே.என்.யு. என்ற பெயரால் அழைக்கப்படும் அந்தப் பல்கலைக் கழக மாணவர் சங்கத் தலைவர் கன்னையா குமார்,  தேசத் துரோகக் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள விவகாரம் இன்று இந்தியா முழுவதும் வேகமாகப் பேசப்படுகிறது. நாடாளுமன்றத் தாக்குதல் வழக்கில் தூக்கிலிடப்பட்ட அப்சல் குருவின் நினைவு தினத்தன்று இந்திய அரசைக் கண்டித்து மாணவர்களைத் திரட்டி பேரணி நடத்தியதற்காகத்தான் கன்னையா குமார் கைது செய்யப்பட்டுள்ளார். கருத்துச் சுதந்திரத்தை வெளிப் படுத்துவது எப்படி தேசத் துரோகம் ஆகும் என்ற கேள்வி பெரிதாக எழுந்துள்ளது. கைதுக்கு பெரும் எதிர்ப்புகள் வந்ததும்,  கன்னையா குமார் நடத்திய பேரணிக்குப் பின்னால் தீவிரவாத சக்திகளின் தொடர்பு இருப்பதாக மத்திய அரசு கூறுகிறது.   ஆனால் அதற்கான எந்த ஆதாரத்தையும் வெளியிட மறுக்கிறது.  இந்தப் பிரச்சினை எங்கே போய் நிற்குமோ?

இவ்வாறு கூறியிருக்கிறார் கருணாநிதி.

-அமுதவன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →