கருணாநிதியா ஸ்டாலினா…. தமிழக எதிர்க்கட்சித் தலைவர் யார்? நாளை மறுநாள் தெரியும்.
சட்டசபை தேர்தலில் தி.மு.க. கூட்டணி 98 இடங்களை கைப்பற்றியது. 89 இடங்களில் தி.மு.க. வெற்றி பெற்று பிரதான எதிர்க்கட்சியாகி உள்ளது.
சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவர் பதவியை கருணாநிதி ஏற்பாரா? அல்லது மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவரா வாரா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த 5 ஆண்டுகளாக சட்டசபையில் இருக்கை வசதி செய்து தரப்படவில்லை என்பதால் கருணாநிதி சட்டசபைக்குள் செல்லாமல் லாபிக்கு சென்று கையெழுத்து போட்டு விட்டு திரும்பி விடுவார்.
இந்த முறை எதிர்க்கட்சி தலைவராக சட்டசபைக்குள் சென்று அமரலாமா? என்று கருணாநிதி ஆலோசித்து வருகிறார்.
இந்த முறையும் சட்ட சபைக்குள் கருணாநிதிக்கு இருக்கை வசதி தனியாக செய்து தரப்படுமா? என்பது தெரியவில்லை.
இதன் சூழலில் எதிர்க்கட்சி தலைவர் பதவியை யார் ஏற்பது என்பது பற்றி கருணாநிதி–மு.க.ஸ்டாலின் இடையே ஆலோசனை நடந்து வருகிறது.
தி.மு.க. செயற்குழு கூட்டம் நாளை மறுநாள் (24–ந்தேதி) காலை 10 மணிக்கு அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நடைபெற்றது.
சட்டசபை எதிர்க்கட்சி தலைவராக வருபவருக்கு அமைச்சருக்கு நிகரான அந்தஸ்து வழங்கப்படுவது வழக்கம்.
அரசு சார்பில் கார், உதவியாளர், பாதுகாவலர் வழங்கப்படுவதுடன், சட்டசபையில் விசாலமான அறையும் ஒதுக்கி தரப்படும்.
-அமுதவன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.