Loading...
You are here:  Home  >  Featured News  >  Current Article

Karunanidhi  says  again  DMDK  will  come  to  DMK  alliance.

By   /  March 21, 2016  /  Comments Off on Karunanidhi  says  again  DMDK  will  come  to  DMK  alliance.

    Print       Email

12310463_1162192233792980_2521727393230645450_nகருணாநிதி மீண்டும் சொல்கிறார் ; ‘தேமுதிக திமுக கூட்டணிக்கு வரும்’.

தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், மனிதநேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், எஸ்.டி.பி.ஐ., பெருந்தலைவர் மக்கள் கட்சி ஆகியவை இடம் பெற்று உள்ளது. மேலும் பல்வேறு அமைப்புகள் தி.மு.க.வுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றன.

InCorpTaxAct
Suvidha

சட்டசபை தேர்தலுக்கு தி.மு.க. தயாராகி வருகிறது. தேர்தல் அறிக்கை, தொகுதி பங்கீடு, கூட்டணி பேச்சு வார்த்தை, வேட்பாளர்கள் தேர்வில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

இந்த நிலையில் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று காலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெற்றது.தி.மு.க. தலைவர் கருணாநிதி தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் அன்பழகன், பொருளாளர் மு.க.ஸ்டாலின், முதன்மை செயலாளர் துரைமுருகன், டி.ஆர்.பாலு, கனிமொழி, எஸ்.பி.சற்குணபாண்டியன், வி.பி.துரைசாமி, ஆர்.எஸ். பாரதி உள்ளிட்ட நிர்வாகிகளும், 65 மாவட்ட செயலாளர்களும் கலந்து கொண்டனர்.

கூட்டம் முடிந்ததும் தி.மு.க. தலைவர் கருணாநிதி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அதன் விவரம் வருமாறு:–

கேள்வி:– இன்று நடந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முக்கியமாக எவை பற்றி விவாதிக்கப்பட்டது?

பதில்:– புதுவை உள்ளிட்ட 65 மாவட்ட செயலாளர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டிருந்தது. அந்த அழைப்பை ஏற்று அனைவரும் கலந்து கொண்டனர். முக்கியமாக சட்டசபை தேர்தல் பற்றி விவாதிக்கப்பட்டது.

கே:– பழம் நழுவி பாலில் விழும் என்று கூறி இருந்தீர்கள். தே.மு.தி.க. கூட்டணிக்கு வரும் என்று நம்பிக்கையுடன் கூறினீர்களே? இப்போது என்ன நிலை உள்ளது?

ப:– நான் கொண்ட நம்பிக்கையை இன்னமும் இழந்து விடவில்லை.

கே: அப்படியானால் தே.மு.தி.க.வுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெறுகிறதா?

ப:– தே.மு.தி.க.வுடன் தி.மு.க. பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

கே:– விஜயகாந்த் தனித்து போட்டி என்று அறிவித்து விட்டார். அப்படி இருக்கும் போது இன்னும் எந்த நம்பிக்கையில் தி.மு.க. கூட்டணிக்கு தே.மு.தி.க. வரும் என்று சொல்கிறீர்கள்?

ப:– நான் நம்பிக்கையை இழந்து விடவில்லை. தே.மு.தி.க.வினர் எப்போது வருவார்கள் என்று சொல்ல முடியாது. ஆனால் வரலாம் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

கே:– கடந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க. அதிக தொகுதிகளில் போட்டியிடாததால் தான் குறைந்த தொகுதிகளை பெற்று தோல்வியைத் தழுவியதாக கூறப்பட்டது. இந்த தேர்தலில் எத்தனை தொகுதிகளில் தி.மு.க. போட்டியிடும்?

ப:– எத்தனை தொகுதிகளில் தி.மு.க. போட்டியிட உள்ளது என்று இப்போதே சொல்வது எனக்கும் நாகரீகம் அல்ல. அதை கேட்பது உங்களுக்கும் நாகரீகம் அல்ல.

கே:– தி.மு.க. தேர்தல் அறிக்கை எப்போது வெளியிடப்படும்?

ப:– விரைவில் வெளிவரும்.

இவ்வாறு தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறினார்.

-அமுதவன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →