Loading...
You are here:  Home  >  Community News  >  Current Article

Karunanidhi sworn in as MLA for the 13th time.

By   /  May 25, 2016  /  Comments Off on Karunanidhi sworn in as MLA for the 13th time.

    Print       Email

13256371_1209513629060840_8883446781666855177_n13வது முறையாக எம்எல்ஏவாகப் பதவி ஏற்றார் கருணாநிதி. மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட எம்எல்ஏக்களும் பதவி ஏற்றனர்.

தமிழ்நாடு சட்டசபைக்கான 15–வது பொதுத்தேர்தலுக்கு பின்னர் இன்று முதன்முதலாக சட்டசபை கூடியது. தேர்தலில் வெற்றிபெற்ற 231 எம்.எல்.ஏ.க்களும் இன்று பதவி ஏற்று வருகின்றனர்.

InCorpTaxAct
Suvidha

தமிழக சட்டசபையின் முதலாவது கூட்டத்தொடர் இன்று காலை 11 மணிக்கு தொடங்குகிறது. இதில் புதிதாக தேர்ந்து எடுக்கப்பட்ட 232 எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்றுக் கொள்வார்கள் என்று முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.

இதற்டையில், அ.தி.மு.க. சார்பில் திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற சீனிவேல் உடல்நிலை பாதிக்கப்பட்டு சில நாட்களாக ஆஸ்பத்திரியில் சிகிச்சைபெற்று வந்தார். இன்று காலை சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

இந்நிலையில், மரணம் அடைந்த எம்.எல்.ஏ. சீனிவேல் நீங்கலாக 231 எம்.எல்.ஏ.க்கள் இன்று பதவி ஏற்றுக் கொள்கிறார்கள். அவர்களுக்கு தற்காலிக சபாநாயகர் செம்மலை பதவிப் பிரமாணம் செய்து வைத்துக் கொண்டுள்ளார்.

முதல்–அமைச்சர் ஜெயலலிதா, அமைச்சர்கள் மற்றும் அ.தி.மு.க., தி.மு.க., காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் தனித்தனியாக வந்து உறுதிமொழியை வாசித்து, பதவி ஏற்று வருகின்றனர்.

இன்று சட்டசபைக்கு வந்த தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு தற்காலிக சபாநாயகர் செம்மலை பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். தமிழ்நாடு சட்டசபையில் தொடர்ந்து 13-வது முறையாக அவர் பதவியேற்று கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரை தொடர்ந்து. 15-வது சட்டசபையின் எதிர்க்கட்சி தலைவராக நேற்று தேர்ந்தெடுக்கப்பட்ட தி.மு.க. பொருளாளர் மு.க. ஸ்டாலின் மற்றும் 87 தி.மு.க., எம்.எல்.ஏ.க்களும் பதவி ஏற்று வருகின்றனர்.

முன்னதாக இன்று சட்டப்பேரவைக்கு வந்த முதலமைச்சர் ஜெயலலிதாவும், மு.க.ஸ்டாலினும் ஒருவருக்கொருவர் வணக்கம் தெரிவித்துக்கொண்டனர்.

-அமுதவன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →