திருவாரூர் தொகுதியில் கருணாநிதி மீண்டும் போட்டி.
தமிழக சட்டசபை தேர்தல் வரலாற்றில் அதிக முறை தேர்தலில் போட்டியிட்டவர். போட்டியிட்ட அனைத்து தேர்தல்களிலும் வெற்றி பெற்றவர் என்ற பெருமையுடன் மிக மூத்த அரசியல் தலைவராக தி.மு.க. தலைவர் கருணாநிதி திகழ்கிறார்.
1957–ல் முதல் முதலாக குளித்தலை தொகுதியில் தேர்தலை சந்தித்து வெற்றி கண்டார். அதன்பிறகு நடந்த அனைத்து தேர்தல்களிலும் போட்டியிட்டு வெற்றி பெற்று வருகிறார். தி.மு.க. பலமுறை தோல்வியை சந்தித்தாலும் கருணாநிதி தோல்வியை சந்தித்தது இல்லை. 1991–ல் தி.மு.க. மிக மோசமான நிலையில் தோல்வியை சந்தித்த போதும் கருணாநிதி, அன்பழகன் இருவரும் வெற்றி பெற்றனர்.
சைதாப்பேட்டை, சேப்பாக்கம், துறைமுகம் உள்ளிட்ட தொகுதிகளில் தேர்தலை சந்தித்த கருணாநிதி முதல் முறையாக கடந்த 2011 தேர்தலில் தனது சொந்த தொகுதியான திருவாரூரில் போட்டியிட்டார்.
பதிவான ஓட்டுக்களில் 63 சதவீதம் கருணாநிதிக்கு கிடைத்தது. அவரது தேர்தல் வரலாற்றில் அதிகமான வித்தியாசத்தில் வெற்றி பெற்றதும் இந்த தொகுதியில்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த தேர்தலிலும் மீண்டும் திருவாரூரில் போட்டியிட முடிவு செய்துள்ளார்.
முதுமையின் காரணமாக பிரசாரம் செய்ய வேண்டாம் என்று கட்சி நிர்வாகிகள் பலர் கேட்டுக் கொண்டும் மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.
திருவாரூரில் வேட்பு மனுதாக்கல் செய்த பிறகு மாநிலம் முழுவதும் பிரசாரம் செய்யவும் திட்டமிட்டுள்ளார். இதற்காக விசேஷமான பிரசார வேனும் தயாராகி உள்ளது.
-அமுதவன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.