Loading...
You are here:  Home  >  Community News  >  Current Article

Karunanidhi urges Colachel port project to be implemented

By   /  July 8, 2016  /  Comments Off on Karunanidhi urges Colachel port project to be implemented

    Print       Email

KARUNANIDHI_thmni_1540750fகுளச்சல் துறைமுக திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்: கருணாநிதி வலியுறுத்தல்

தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி-பதில் வடிவிலான அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

InCorpTaxAct
Suvidha

கேள்வி:- “மாதொருபாகன்” நாவலுக்கு தடைவிதிக்க முடியாது என்றும், எழுத்தாளர்களின் உரிமையை அரசு பாதுகாக்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் அளித்துள்ள உத்தரவு பற்றி?.

பதில்:- அந்த வழக்கினை விசாரித்து உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.கே.கவுலும், நீதிபதி புஷ்பா சத்ய நாராயணாவும் அளித்துள்ள தீர்ப்பு வரவேற்கத்தக்க ஒன்றாகும். அந்தத் தீர்ப்பில், “ஒரு நாவலைப் படிக்க வேண்டுமா வேண்டாமா என்பதை வாசகர்கள்தான் முடிவு செய்ய வேண்டும். அது அவர்களது விருப்பம். அந்த நாவல் பிடித்தால் படிக்கட்டும். பிடிக்கவில்லை என்றால் அதைத் தூக்கி எறியட்டும்.

ஆனால் ஒரு படைப்பாளி என்ன எழுத வேண்டும், என்ன எழுதக் கூடாது என்பதை சட்டத்துக்கு அப்பாற்பட்டவர்கள் கட்டுப்படுத்தவோ, தீர்மானிக்கவோ முடியாது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் பேச்சுரிமை, கருத்துரிமைகளை வழங்கியுள்ளது. இந்த உரிமைகளுக்குக் குந்தகம் ஏற்படாமல் பாதுகாப்பது அரசின் கடமை. குறிப்பாக எழுத்தாளரின் உரிமையைப் பாதுகாப்பது அரசின் முக்கியக் கடமையாகும். இந்தக் கடமையை ‘மாதொருபாகன்’ நாவல் பிரச்சினையில் அரசு செய்யத் தவறிவிட்டது.

கேள்வி:- அ.தி.மு.க. அரசின் சார்பாக சிறு, குறு விவசாயிகளின் 5,780 கோடி ரூபாய் கடன்களைத் தள்ளுபடி செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளதே?.

பதில்:- 2016, மே மாதம் 23-ம் தேதி ஜெயலலிதா முதல்-அமைச்சராகப் பதவியேற்றதும், முதன் முதலாகக் கையெழுத்திட்ட 5 கோப்புகளில் ஒன்றுதான், விவசாயிகளின் கடன் தள்ளுபடி பற்றிய பிரச்சினை. ஒரு மாதம் கழித்து அதற்கான அரசாணைதான் இப்போது பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தற்போது அ.தி.மு.க. அரசு பெரிய விவசாயிகளின் கடன்களைப் பற்றிப் பரிசீலனை செய்யாமல், சிறு, குறு விவசாயிகளின் கடன்களை மட்டும் தள்ளுபடி செய்வதாக அரசாணை பிறப்பித்துள்ளது. ஒரு வேளை விரைவில் வெளிவரவிருக்கின்ற தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் அனைத்து விவசாயிகளின் கடன்களையும் தள்ளுபடி செய்வதாக அறிவிப்பார்களோ என்னவோ? ஆனால் அவ்வாறு தெளிவாக அறிவிக்க வேண்டும் என்று விவசாயிகளின் சார்பில் வலியுறுத்துகிறேன்.

கேள்வி:- தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்வது நின்றபாடில்லையே?.

பதில்:- அதுபற்றி நமது முதல்-அமைச்சர் ஜெயலலிதா நேற்றையதினம் பிரதமருக்கு கடிதம் எழுதி விட்டார். நாகை தெற்கு மாவட்டம், அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த 17 மீனவர்கள், 2 விசைப்படகுகளுடன் நான் திருவாரூர் தொகுதியில் நன்றி அறிவிப்புக் கூட்டத்திற்கு சென்ற நாளில், சிங்களக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்கள். அதற்கு முன்பே ராமேசுவரம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் கைது செய்யப்பட்டு இலங்கை சிறையிலே வாடிக்கொண்டிருக்கிறார்கள். இதற்கிடையே குறைந்த எண்ணிக்கையில், இந்திய மீனவர்களின் படகுகளுக்கு உரிமம் வழங்குவது குறித்து, இலங்கை அரசு ஆலோசித்து வருவதாகவும் செய்தி வந்துள்ளது.

தமிழகம் – இலங்கை மீனவர் பிரச்சினையில் ஒரு நிரந்தரத் தீர்வு ஏற்பட இந்த லைசென்ஸ் முறை வழிவகுக்கும் என்று மீனவர் பேரவை நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். எனவே மத்திய அரசு முனைப்புடன் செயல்பட்டு தமிழக மீனவர்களின் பிரச்சினைக்கு நிரந்தரத்தீர்வு காண வேண்டும்.

கேள்வி:- குளச்சல் துறைமுகம் அமைக்க மத்திய அரசு 25 ஆயிரம் கோடி ரூபாய் திட்டத்திற்கு அனுமதி வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருக்கிறதே?.

பதில்:- தமிழர்களின் நீண்ட நாள் கோரிக்கைகளில் ஒன்றுதான் குளச்சல் துறைமுகம். தமிழகத்தில் சென்னை, தூத்துக்குடி, எண்ணூர் ஆகிய 3 பெரிய துறைமுகங்கள் தான் உள்ளன. சென்னை, தூத்துக்குடியில் மட்டுமே சரக்குகள் கையாளப்படுகின்றன. இந்த 3 துறைமுகங்களிலும் அதிநவீன கப்பல்கள் வந்து செல்லும் வகையில், கட்டமைப்புகள் இல்லாததால், வெளிநாடுகளுக்கு அனுப்பப்படும் சரக்குகள், கொழும்பு, சிங்கப்பூர் துறைமுகங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்துதான் பிற நாடுகளுக்கு அனுப்ப முடியும். இறக்குமதியும் அவ்வாறே நடந்து வருகிறது. இதுபோன்று அல்லாமல், சர்வதேசக் கப்பல்களும் நேரடியாக வந்து செல்லும் வகையில், குளச்சலில் 21 ஆயிரம் கோடி ரூபாயில் வர்த்தகத் துறைமுகம் அமைக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது. அதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து ஆய்வுகள் நடத்தப்பட்டன.

ஆனால் இந்தத் திட்டம் வந்தால் மீனவர்கள் இடம் பெயர வேண்டி வரும்; வாழ்வாதாரம் பாதிப்படையும்; 25 கிலோ மீட்டர் தொலைவில் கேரளத்தில் விழிஞ்சம் வர்த்தகத் துறைமுகம் உள்ள போது, அருகே இன்னொரு வர்த்தகத் துறைமுகம் தேவையில்லை என்று பல மீனவ அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவித்திருக்கின்றன.

குமரி மாவட்டத்தைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர்களும் கலெக்டரைச் சந்தித்து, இணையத்தில் துறைமுகத்தை அமைக்கக்கூடாது என்று தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்திருக்கிறார்கள். இந்த நிலையில்தான் குளச்சல் அருகே இணையத்தில் 25 ஆயிரம் கோடி ரூபாயில் வர்த்தகத் துறைமுகம் அமைப்பதற்கும், முதற்கட்டப் பணியை 6,575 கோடி ரூபாயில் மேற்கொள்ளவும், மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

“குளச்சல் துறைமுகம்” தமிழகத்தின் நீண்டகால எதிர்பார்ப்பு என்பதால் இந்தத் திட்டத்தை வரவேற்கும் அதேநேரத்தில், அந்த மாவட்டத்தில் வாழும் மீனவர்களின் வாழ்வாதாரம் எந்த விதமான பாதிப்புக்கும் உள்ளாகாத வகையில், அவர்களின் பிரதிநிதிகளை அரசின் சார்பில் அழைத்துப்பேசி, அவர்களுக்கு தக்கப் பாதுகாப்பு அளித்து அனைவரும் ஒருங்கிணைந்து வரவேற்கத்தக்க நிலையில் இத்திட்டத்தினை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

கேள்வி:- வரும் 13-ம் தேதி, தமிழக பால் உற்பத்தியாளர்கள் நலச் சங்கத்தின் சார்பில் சேலம், விழுப்புரம் போன்ற இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக அறிவித்திருக்கிறார்களே?.

பதில்:- தமிழகத்தில் 2012-2013-ம் நிதியாண்டில் பால் உற்பத்தி ஒரு கோடியே 54 லட்சம் லிட்டர். தற்போது இது 2 கோடியே 5 லட்சம் லிட்டராக உயர்ந்துள்ளது. ஆவின் பால் கொள்முதல் 2013-ல் 24 லட்சம் லிட்டராக இருந்தது. தமிழகம் முழுவதும் பால் உற்பத்தி வெகுவாக உயர்ந்துள்ள நிலையில், ஆவின் நிறுவனம் பால் கொள்முதலைக் குறைத்து வருகிறதாம்.

உற்பத்தி ஆகும் பால் முழுவதையும் கொள்முதல் செய்வோம் என்று அறிவித்துவிட்டு, பால் உற்பத்தியாளர்களை இப்படி வஞ்சிப்பது நியாயமே அல்ல. பால் உற்பத்தியாளர் உள்ளிட்ட தமிழக மக்களின் விரக்தியைக் கண்டு வேதனைதான் மிஞ்சுகிறது.

இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

-அமுதவன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →