Loading...
You are here:  Home  >  Community News  >  Current Article

Karunanidhi visits Assembly and signed in the register.

By   /  August 16, 2016  /  Comments Off on Karunanidhi visits Assembly and signed in the register.

    Print       Email

201608161328156440_Karunanidhi-today-came-to-the-assembly_SECVPFசட்டமன்றத்துக்கு வந்தார் கருணாநிதி. வருகைப் பதிவேட்டில் கையெழுத்திட்டுவிட்டுத் திரும்பினார்.

தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மாதம் தொடங்கியது. தற்போது மானியக்கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

InCorpTaxAct
Suvidha

கைத்தறி, துணிநூல், தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்புத்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதம் இன்று நடந்தது. இந்த மானியக்கோரிக்கை விவாதத்தை தி.மு.க. உறுப்பினர் தா.மோ.அன்பரசன் தொடங்கி வைத்தார்.

இந்த நிலையில் மதியம் 12.30 மணியளவில் தி.மு.க. தலைவர் கருணாநிதி சட்டசபைக்கு வந்தார். அவரை எதிர்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின், துணைத்தலைவர் துரைமுருகன், கொறடா சக்கரபாணி மற்றும் தி.மு.க. உறுப்பினர்கள் வரவேற்றனர்.

சட்டமன்ற லாபிக்கு வந்த அவர் சட்டமன்ற உறுப்பினர்கள் பதிவேட்டில் கையெழுத்திட்டார். சிறிது நேரத்தில் அங்கிருந்து கருணாநிதி புறப்பட்டு சென்றார்.

-அமுதவன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →