6-வது முறையாக கலைஞர் முதல்வராக வருவார்- ஸ்டாலின் பேச்சு!
தி.மு.க. சட்ட திட்ட திருத்தக்குழு செயலாளர் பாலவாக்கம் சோமு இல்லத் திருமண விழா சோழிங்கநல்லூரில் நடந்தது. மணமக்கள் பிரபாகரன் சோமு–கிருத்திகா செல்வம் திருமணத்தை பொருளாளர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கி நடத்தி வைத்தார்.
அப்போது அவர் பேசியதாவது:–
மணமக்களை வாழ்த்தும் இந்த சமயத்தில் அரசியல் பற்றியும் சில கருத்துக்களை சொல்ல வேண்டி உள்ளது. தி.மு.க.வை தீண்டதகாத கட்சி என்று ஒரு சிலரால் கருதப்பட்ட நிலைமாறி இன்று அனைவரும் ஏற்றுக் கொண்டுள்ள கட்சி எது என்றால் அது தி.மு.க. தான்.
இப்போது நடைபெறும் அ.தி.மு.க. ஆட்சி செயலற்ற நிலையில் கோமாவில் உள்ளது. மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புகிறார்கள். இன்னும் 96 நாளில் ஒரு ஆட்சி மாற்றம் ஏற்பட போகிறது.
2016 சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைப்பது உறுதி என்பதை நான் அழுத்தம் திருத்தமாக சொல்லிக் கொள்கிறேன். தி.மு.க. தலைவர் கருணாநிதி 6–வது முறையாக முதல்–அமைச்சராக பதவி ஏற்பார். இது உறுதி.
மண விழாவில் கனிமொழி எம்.பி., துரைமுருகன், பொன்முடி, டி.கே.எஸ். இளங்கோவன், ஆலந்தூர் பாரதி, சபாபதி மோகன், மாவட்டச் செயலாளர்கள் மா.சுப்பிரமணியன், தா.மோ. அன்பரசன் உள்பட பலர் பங்கேற்றனர்.
-அமுதவன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.