நடிகர் கார்த்தியின் காஷ்மோரோ படத்தின் பர்ஸ்ட் லுக் – கதை இதுதான்?
கார்த்தி நடிப்பில் பிரமாண்டமாக உருவாகி வரும் படம் காஷ்மோரோ. இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் சமீபத்தில் நடந்து வருகிறது.
கார்த்தி தன் டுவிட்டர் பக்கத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்டது என தெரிவித்து இருந்தார். இப்படத்தில் கார்த்தியின் அப்பாவாக விவேக் நடிக்கின்றார்.
இவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க, ஸ்ரீதிவ்யா இப்படத்தில் பத்திரிக்கையாளராக நடித்துள்ளாராம். காஷ்மோரோ படத்தின் பர்ஸ்ட் லுக் நேற்று வெளிவந்தது. இப்படத்தின் போஸ்டர்ஸ் அனைத்தும் மிரட்டுகின்றது என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
இப்படத்தில் கார்த்தி தன் தந்தை விவேக்குடன் சேர்ந்து பேய் ஓட்டும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாகவும், அப்படி ஒரு சமயத்தில் விளையாட்டாக செய்ய போய், முன் ஜென்மத்திற்கு செல்வது போல் கதை இருக்கும் என கிசுகிசுக்கப்படுகின்றது.
இப்படத்திற்காக பிரமாண்ட செட், கிராபிக்ஸ் என பல கோடிகள் செலவு செய்துள்ளனர், தீபாவளி விருந்தாக இப்படம் வரவுள்ளது.
-ரயன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.