சிகிச்சைப் பெற்றுவரும் திமுக தலைவர் கருணாநிதியின் புகைப்படத்தை வெளியிட்டது காவேரி மருத்துவமனை.
சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திமுக தலைவர் கருணாநிதியின் புகைப்படம் மருத்துவமனை சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. கருணாநிதி கடந்த 1 ஆம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை முடிந்த பின் 7 ஆம் தேதியன்று வீடு திரும்பினார். இந்நிலையில் கருணாநிதிக்கு மீண்டும் உடல்நலத்தில் பாதிப்பு ஏற்பட்டது.
மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்ட கருணாநிதி மீண்டும் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நுரையீரல் மற்றும் தொண்டையில் தொற்று ஏற்பட்டிருப்பது கண்டு பிடிக்கப்பட்டு அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது உறுதி செய்யப்பட்டது. பின் கருணாநிதியின் தொண்டையில் துளை போடப்பட்டு சுவாச குழாய் பொருத்தப்பட்டது.
மருத்துவர்களின் தொடர் சிகிச்சையை தொடர்ந்து கருணாநிதியின் உடல் நிலை சீராகி வருவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்நிலையில் உடல் நலம் பெற்று தொலைக்காட்சி பார்க்கும் கருணாநிதியின் புகைப்படத்தை காவேரி மருத்துவமனை தற்சமயம் வெளியிட்டுள்ளது. இதை தொடர்ந்து வரும் வெள்ளியன்று கருணாநிதி வீடு திரும்புவார் என மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.