Loading...
You are here:  Home  >  Politics  >  Delhi Politics  >  Current Article

Kejriwal Completes One Year; Answers Phone

By   /  February 14, 2016  /  Comments Off on Kejriwal Completes One Year; Answers Phone

    Print       Email

kejriwalடெல்லியில் கெஜ்ரிவால் பதவியேற்று ஓராண்டு நிறைவு. மக்களின் கேள்விகளுக்கு தொலைபேசியில் பதில்.

டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு பதவியேற்று இன்றுடன் ஓராண்டு நிறைவு பெறுகிறது.

InCorpTaxAct
Suvidha

இதையொட்டி தனது ஆட்சியின் ஓராண்டு கொண்டாட்டத்தை பொதுமக்களுடன் நேரடியாக பேசி, குறைகளை தீர்த்து வைக்க முதல்–மந்திரி கெஜ்ரிவால் முடிவு செய்தார்.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை அவர் டுவிட்டரில் வெளியிட்ட தகவலில், ‘‘கடந்த ஆண்டு இதே நாளில் டெல்லி மக்கள் ஆம் ஆத்மி மீது காதலில் விழுந்தனர். இந்த அன்பு பிணைப்பு ஆழமானது, என்றென்றும் நீடிக்கக் கூடியது’’ என்று கூறி இருந்தார்.

டுவிட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்ட மற்றொரு செய்தியில், ‘‘ஆம் ஆத்மி அரசின் முதலாண்டு நிறைவு தினத்தை முன்னிட்டு உங்களுடன் பேச விரும்புகிறேன். டெல்லி மாநில அரசு பற்றி நீங்கள் ஏதாவது கேட்க விரும்பினால், 41501367, 41501383 மற்றும் 23346658 ஆகிய எண்களுடன் தொடர்பு கொண்டு பேசுங்கள். 11 மணி முதல் 1 மணி வரை உங்களுக்கு நானும், மந்திரிகளும் பதில் அளிக்க உள்ளோம்’’ என்று கூறி இருந்தார்.

இதையடுத்து டெல்லி கன்னவுட் பிளேஸ் பகுதியில் உள்ள டெல்லி மாநகராட்சி கூட்ட அரங்கில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அங்கு இருந்தபடி கெஜ்ரிவாலும், மந்திரிகளும் போனில் மக்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தனர்.

இதில், கெஜ்ரிவாலிடம்தான் நிறைய பேர் கேள்விகள் கேட்டனர். மதியம் 1 மணிவரை இந்த நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமானவர்களின் குறைகள் தீர்க்கப்பட்டன.

இன்று பிற்பகல் டெல்லியில் 20 பாலிகிளினீக்குகளை கெஜ்ரிவால் திறந்து வைக்க உள்ளார். இதுகுறித்து கெஜ்ரிவால் கூறுகையில், ‘‘ஆம் ஆத்மி அரசு பதவியேற்ற முதல் நாளில் இருந்து வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறது. இலவச மின்சாரம், இலவச குடிநீர் வழங்கியுள்ளோம். இந்திய அரசியலில் எங்களது சாதனைகள் கேள்விப்படாத ஒன்றாகும்’’ என்றார்.

ஆனால் டெல்லி பா.ஜ.க.வினர் கெஜ்ரிவாலின் ஓராண்டு கொண்டாட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். கடந்த ஓராண்டாக டெல்லி இருளில் இருப்பதாக கூறி அவர்கள் இன்று டெல்லியில் ஊர்வலங்கள் நடத்தினார்கள்.

-அமுதவன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →