அரவிந்த் கெஜ்ரிவாலின் பொற்கோவில் பயணம் பப்ளிசிட்டிக்காக தான்: அமரீந்தர் சிங்
அடுத்த ஆண்டு பஞ்சாபில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் ஆம் ஆத்மி கட்சி அதிக கவனம் செலுத்திவருகிறது. இந்நிலையில், சமீபத்தில் ஆம் ஆத்மி இளைஞர் பிரிவு கொள்கை அறிக்கை வெளியிடப்பட்டது. இந்த புத்தகத்தில் பொற்கோயில் சித்தரிக்கப்பட்டு அதன் அருகே துடைப்பம் (கட்சியின் சின்னம்) இருப்பதாக வடிவமைக்கப்பட்டதால் சர்ச்சை கிளம்பியது.
மேலும் பஞ்சாபை சேர்ந்த ஆம் ஆத்மி தலைவர் ஒருவர், ஆம் ஆத்மி வெளியிட்ட தேர்தல் அறிக்கையை சீக்கியர்களின் புனித நூலுடன் ஒப்பிட்டார். இதுவும் சீக்கியர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. சீக்கியர்களின் கோபம் தேர்தலில் வெளிப்படலாம் என்ற அச்சம் ஆம் ஆத்மி கட்சிக்கு ஏற்பட்டது.
இந்நிலையில் அக்கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று அமர்தசரஸ் பொற்கோயிலுக்கு வந்து, சமையலறையில் பாத்திரங்களைக் கழுவினார்.
இதற்காக, ஞாயிற்றுக்கிழமை இரவே அமர்தசரஸ் வந்துவிட்ட கெஜ்ரிவால், நேற்று காலை பொற்கோயிலுக்கு சென்று வழிபட்டதுடன், சமுதாய சமையல் கூடத்துக்குள் சென்று, அங்கிருந்த பாத்திரங்களை கழுவினார்.
இந்நிலையில், அரவிந்த் கெஜ்ரிவாலின் பொற்கோவில் பயணம் விளம்பரத்திற்காகவே தான் என்று அம்மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் அமர்சிங் விமர்சித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
பொற்கோவில் தொடர்பான சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இந்த பிராயசித்தம் செய்யப்பட்டுள்ளது.
இயற்கையாகவே நீங்கள் ஒரு அராஜகவாதி. மோசமாக நிர்வாகி. எப்பொழுதும் மற்றவர்கள் மீது குற்றம் சுமத்துபர். நீங்கள் தவறான இடத்தில் உள்ள தவறான மனிதர்.
இவ்வாறு அமர்சிங் தெரிவித்தார்.
-அமுதவன்
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.