Loading...
You are here:  Home  >  Community News  >  Current Article

Kerala actor Dileep removed from ‘AMMA’, an association that once vowed to stand by him

By   /  July 11, 2017  /  Comments Off on Kerala actor Dileep removed from ‘AMMA’, an association that once vowed to stand by him

    Print       Email

பாவனா விவகாரம் கேரள நடிகர் சங்கத்தில் இருந்து நடிகர் திலீப் நீக்கம் ; மம்முட்டி அறிவித்தார்

நடிகை பாவனா கடந்த பிப்ரவரி மாதம் 17–ந் தேதி, கேரள மாநிலம் கொச்சியில் காரில் சென்று கொண்டிருந்தபோது, ஒரு மர்ம கும்பலால் வழிமறித்து கடத்தப்பட்டார். காரில் அவருக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டது. இச்சம்பவம், கேரளாவையே உலுக்கியது. அடுத்த ஓரிரு நாளில், குற்றச்செயல் நடந்த காரின் டிரைவர் மார்ட்டின் அந்தோணி என்பவன் கைது செய்யப்பட்டான். அவன் பல்சர் சுனில் என்பவனை பற்றியும், அவனுடைய கூட்டாளிகளை பற்றியும் தெரிவித்தான். இதையடுத்து, பல்சர் சுனில் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

InCorpTaxAct
Suvidha

இச்சம்பவத்தின் சதி பின்னணியை கண்டறிய ஐ.ஜி. தினேந்திர காஷ்யப் தலைமையில் சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டது. கூடுதல் டி.ஜி.பி. சந்தியா, வழக்கின் மேற்பார்வை அதிகாரியாக நியமிக்கப்பட்டார். இந்த சம்பவத்தில், பிரபல மலையாள கதாநாயகன் திலீப்புக்கு தொடர்பு இருப்பதாக ஆரம்பத்தில் இருந்தே கூறப்பட்டு வந்தது. ஆனால், அவர் அதை மறுத்து வந்தார். பல்சர் சுனிலை தனக்கு தெரியாது என்றும் அவர் கூறினார். இந்நிலையில், திடீர் திருப்பமாக, நடிகர் திலீப் நேற்று காலை கைது செய்யப்பட்டார்.

நடிகை பாவனாவை கடத்துவதற்கும், பாலியல் பலாத்காரம் செய்வதற்கும் சதித்திட்டம் தீட்டியதற்காக அவர் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

பாவனா மீது கொண்ட தனிப்பட்ட பகையே திலீப்பின் சதித்திட்டத்துக்கு காரணம் என்றும் அவர்கள் கூறினர். திலீப் அங்கமாலி  கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு 14 நாட்கள் நீதிமன்ற காவலுக்கு அனுப்பட்டு உள்ளார். இன்று காலை கொச்சியில் இருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அலுவா துணை சிறைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு அடைக்கபட்டார்.

நடிகர் திலீப்புக்கு எதிராக  போலீசார் 19  முக்கிய ஆதாரங்களை கண்டு பிடித்து உள்ளனர். இந்த வழக்கில்  முதல் குற்றவாளியாக பல்சர் சுனிலும் 2 வது குற்றவாளியாக நடிகர் திலிப்பும்  சேர்க்கப்பட்டு உள்ளனர்.முதல் குற்றவாளி சுனிலுக்கு நடிகர் திலீப் இந்த குற்ற செயலுக்கு ரூ.2 லட்சம் வழங்கி உள்ளார்.திலீபுக்கு  எதிராக சதி மற்றும் கற்பழிப்பு உட்பட பல்வேறு குற்றச்சாட்டுகளை போலீசார் பதிவு செய்து உள்ளனர்.

இந்த நிலையில்  பாவனா விவகாரத்தில் கைதான திலீப் கேரள நடிகர் சங்கம்மான மலையாளத் திரைப்பட கலைஞர்கள் சங்கம் அம்மாவில் இருந்து  நீக்கப்பட்டுள்ளார். இந்த சங்கத்தில் திலீப் பொருளாளராக இருந்தார். கொச்சியில் பானம்பள்ளி நகரில் நடிகர் மம்முட்டியின் வீட்டில்  நடைபெற்ற அம்மாவின் செயற்குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.இந்த கூட்டத்தில் முன்னணி நடிகர்கள் மம்முட்டி, மோகன்லால், பிருதிவிராஜ் ,அஷிப் அலி,  தேவன்,ரம்யா நம்பீசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூட்டம் முடிந்ததும் நடிகர் மம்முட்டி இதனை அறிவித்தார்.அவர் கூறியதாவது:-

நடிகர் திலிப் அம்மா சங்கத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கபடுகிறார். நாங்கள் பாதிக்கபட்ட நடிகைக்கு தொடர்ந்து ஆதரவளிப்போம். என மம்முட்டி வலியுறுத்தினார். ஒரு குறிப்பிட்ட ஒருவரை நாங்கள் எப்போதும் ஆதரித்தது இல்லை.  இந்த அமைப்பு எலோருக்குமானது.என கூறினார்.

இந்த விவகாரத்தில் இன்னொசென்ட் பதவி விலக வேண்டும் என கேட்டபோது ஏன் பதவி விலக வேண்டும் என மோகன் லால் கேட்டார். அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.அதனால் தான் அவர் இங்கு இல்லை.

கேரளா திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம்,கேரளா திரைப்பட ஊழியர் கூட்டமைப்பு , ஆகியவற்றில் இருந்தும் திலீப் நீக்கபட்டு உள்ளார்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →