Loading...
You are here:  Home  >  Featured News  >  Current Article

Kerala CM Oomman Chandy files nomination in Pudhuppalli for 11th time.

By   /  April 29, 2016  /  Comments Off on Kerala CM Oomman Chandy files nomination in Pudhuppalli for 11th time.

    Print       Email

20160429289817கேரள முதல்வர் உம்மன் சாண்டி புதுப்பள்ளி தொகுதியில் 11வது முறையாகப் போட்டியிடுகிறார்.

கேரள சட்டசபைக்கு வரும் 16-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 22-ந்தேதி தொடங்கியது. மாநிலத்தில் ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள காங்கிரஸ்-முஸ்லிம் லீக் தலைமையிலான கூட்டணியும், ஆட்சியை மீண்டும் பிடிக்க இடதுசாரி இயக்கங்களும் முனைப்பு காட்டி வருகின்றன.

InCorpTaxAct
Suvidha

மாநிலத்தில் புதிதாக ஆட்சி அமைக்க பா.ஜ.க.வும் முயன்று வருகிறது. இதனால், அங்கு தேர்தல்களம் சூடுபிடித்துள்ளது.

இந்நிலையில், வேட்பு மனு தாக்கல் செய்யும் கடைசிநாளான இன்று கேரள முதல் மந்திரி உம்மன் சாண்டி மத்திய திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள புதுப்பள்ளி தொகுதியில் இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

தொடர்ந்து பத்துமுறை இதேதொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ள உம்மன் சாண்டி, பதினொன்றாவது முறையாக 2016-சட்டசபை தேர்தலிலும் புதுப்பள்ளி தொகுதியில் போட்டியிடுகிறார். இதையொட்டி, பள்ளிக்கத்தோடு பகுதியிலுள்ள பி.டி.ஓ. அலுவலகத்தில் உள்ள தொகுதி தேர்தல் அலுவலகத்துக்கு இன்று காலை உம்மன் சாண்டி வந்தார். அவரை 11 குழந்தைகள் கையில் ரோஜா மலர்களை அளித்து வரவேற்றனர்.

-அமுதவன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →